»   »  பாவனாவின் பச்சக்!

பாவனாவின் பச்சக்!

Subscribe to Oneindia Tamil

ஆரம்பத்தில் ஏகப்பட்ட கண்டிஷன்களோடு வந்திறங்கிய பாவனா இப்போதுஒவ்வொன்றாக காற்றில் பறக்க விட ஆரம்பித்துள்ளாராம்.

சித்திரம் பேசுதடி மூலம் தமிழுக்கு வந்த பாவனாவுக்கு அப்படம் பெரிய பிரேக்கைகொடுத்தது. நல்லா நடிக்கிறாரே என்று ஆச்சரியப்பட்ட பலர் பாவானவைத் தேடிவந்தனர்.

அப்போது அவர்களிடம் பாவான போட்ட கண்டிஷன்களில் முக்கியமானவை கிஸ்கொடுக்க மாட்டேன், நெருக்கமாக நடிக்க மாட்டேன், குறிப்பாக தொப்புளைக்காட்டவே மாட்டேன் என்பதுதான்.

இப்போது இதிலிருந்து வேகமாக தளர்ந்து வருகிறாராம் பாவனா. முத்தம் கொடுக்கமாட்டேன் என்று கூறியவர் தீபாவளி படத்தில் ஜெயம் ரவிக்கு பளபளப்பான ஒருஉம்மா கொடுத்து நடித்துள்ளாராம்.

இப்படத்தில் ரவிக்கு உதட்டில் ஒரு சூடான முத்தம் கொடுப்பது போன்ற காட்சியைசெட் செய்து விட்டு பாவனாவிடம் போய் மேட்டரைக் கூறியுள்ளார் இயக்குநர் எழில்.முதலில் முடியவே முடியாது என்று கூறியுள்ளார் பாவா.

ஆனால் இந்த சீன் ரொம்ப அவசியம் என்று விளக்கிய பின்னர் ஓ.கே. என்றாராம். படுசூடாக வந்துள்ளதாம் இந்த லிப் டூ லிப் முத்தக் காட்சி.

இதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலை படத்தில் ஸ்ரீகாந்த்துடன் படு நெருக்கமாக சிலகாட்சிகளில் நடித்துள்ளாராம் பாவனா. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் அசின்,திரிஷா, நயனதாராவுக்கு போட்டியாக கிளாமர் கோதாவிலும் பாவனா குதிக்கலாம் எனகூறுகிறார்கள்.

கமலுடன் பாவனாவை ஜோடி சேர்க்க ஒரு முயற்சி நடந்து வருகிறதாம். தசாவதாரம்படத்திற்குப் பின்னர் கமல் நடிக்கும் படத்தில் பாவனா நடிக்கக் கூடுமாம்.

நல்லது!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil