»   »  பஞ்சாயத்து பாவனா!

பஞ்சாயத்து பாவனா!

Subscribe to Oneindia Tamil

பாவனா என்றால் பஞ்சாயத்து என்று டிக்ஷனரியில் போட்டு விடலாம் போல. அந்த அளவுக்கு சமீப காலமாகசலசலப்பிலும், சர்ச்சையிலும் சிக்க ஆரம்பித்துள்ளார் இந்த சித்திரம் பேசுதடி பாவை.

புதிதாக அறிமுகமாகும் நாயகிகள் ஆரம்பத்தில் ஒழுங்குப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். ஆனால் போகப் போகபுத்தியை காட்டி விடுகிறார்கள். இரண்டு படம் ஓடி விட்டால் போதும் ஏகப்பட்ட இம்சைகளை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த நாயகிகள்.

இந்த பஞ்சாயத்து நாயகிகள் வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் பாவனா. சித்திரம் பேசுதடி படத்திற்குப் பிறகுபாவனா நடித்த படம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள்ளாகவே பாவனாவைப் பற்றி ஏகப்பட்டபுகார்கள் வர ஆரம்பித்து விட்டன.

கால்ஷீட் குளறுபடியில் பாவனா பட்டையைக் கிளப்புகிறாராம். அதேபோல அவர் சம்பந்தப்பட்ட படநிகழ்ச்சிகளுக்கும், ஷூட்டிங்குகளுக்கும் படு தாமதமாக வந்து செல்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு.

கிழக்குக் கடற்கரைச் சாலை படத்திற்காக சமீபத்தில் வெளிநாட்டில் ஒரு பாடலை சுடுவதாக இருந்தார்கள். ஆனால்பாவனா வராததால் அந்த புரோகிராம் கேன்சல் ஆகி விட்டதாம். எல்லாம் பாவனா செய்த குப்பாச்சு குழப்பாச்சுவேலைதான் காரணம் என்கிறார்கள்.

ஏன் இப்படி என்று பாவனாவிடமே நேரில் கேட்டோம். அதற்கு பாவனா, கிழக்குக் கடற்கரைச் சாலையின்படப்பிடிப்பு முடிந்து விட்டது. நான் கொடுத்த கால்ஷீட்டையும் முழுமையாக பயன்படுத்தி விட்டார்கள்.

இந்த நிலையில் வெளிநாட்டில் ஒரு பாடலைப் படமாக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அவர்களுக்கானகால்ஷீட் முடிந்து விட்டதால் நான் தீபாவளி பட ஷூட்டிங்குக்கு போய் விட்டேன். என்னால் அந்த கால்ஷீட்டைஉடைத்து விட்டு வர முடியாத நிலை. இதனால்தான் அந்தப் பாடல் காட்சியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. மற்றபடி கால்ஷீட் குழப்பம் எல்லாம் நடக்கவில்லை என்கிறார்.

மேலும், என்னிடம் பாஸ்போர்ட் இல்லை என்றும் அதனால் தான் வர முடியவில்லை என்றும் அதற்குள்ளாகவதந்தியை கிளப்பி விட்டு விட்டார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை குழுவினர் என்னைத் தொடர்புகொண்டபோது நான் துபாயில் இருந்தேன். பாஸ்போர்ட் இல்லாமல் துபாய்க்குப் போக முடியுமா?

தீபாவளி படத்திற்காக கொடுத்திருந்த கால்ஷீட்டை ரத்து செய்தால் பல குழப்பம் ஏற்படும். அதனால்தான் கிழக்குக்கடற்கரைச் சாலை பாடலை நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதுதான் நடந்தது, இதுதான் உண்மை என்றார்பாவனா.

சரி, நான் கடவுள் ஷூட்டிங் எப்படி உள்ளது என்று பேச்சை மாற்றினோம். இதில் நான் குருட்டுப் பெண்ணாகநடிக்கிறேன். இதற்காக விசேஷமான காண்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொண்டு நடிக்கிறேன். இதைப் போட்டால்கண் தெரியாது. எனவே கண் தெரியாத பெண் போலவே பார்ப்பதற்கு இருக்கும் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

ரஜினி கூட நடிக்கும் வாய்ப்பு வந்தால் என்ன பண்ணுவீர்கள் என்று கலாய்த்தோம். ரஜினி கூட நடிக்க கசக்குமாஎன்ன? ஆனால் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடவோ அல்லது சின்ன கேரக்டரில் நடிக்கவோ கூப்பிட்டால்கண்டிப்பாக மாட்டேன் என்று சொல்லி விடுவேன். எனக்கும் முக்கியத்துவம் இருக்குமானால் ரஜினி சார் கூடமறுக்க மாட்டேன் என்கிறார்.

படா ஆளுதான்!

Please Wait while comments are loading...