பாவனாவை 'கட்டிக் கொடுக்க' பெற்றோர் முடிவு!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பாவனா, 2002-ல் மலையாளத்திலிருந்து வந்தவர். சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட அவர், தெலுங்கு படங்களில் நடிக்கப் போன பிறகு, தமிழில் காணாமல் போனார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்தார்.
ஆனாலும் இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் பெரிய படம் எதுவும் பாவனாவுக்கு இல்லை. அவருடன் திரையுலகுக்கு வந்த நடிகைகள் கோபிகா, நவ்யா நாயர் போன்றோர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
எனவே பாவனாவுக்கும் விரைவில் திருமணம் நடத்த தாய் புஷ்பா, தந்தை பாலச்சந்திரமேனன் முடிவு செய்துள்ளனர். பொருத்தமான மாப்பிள்ளையை அவர்கள் தேடி வருவதாக பாவனா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
கேரளாவின் முக்கிய திருமண தகவல் மையங்களுக்கு சென்றும் பாவனா புகைப்படம் கொடுத்து பொருத்தமான வரன் இருந்தால் கூறும்படி கேட்டுக் கொண்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











