கழுத்துல தாயத்து... நெற்றியில பெரிய பொட்டு... தலையை விரிச்சுப்போட்டு.. அடடா நம்ம பாவனாவா இது?
சென்னை: கழுத்தில் தாயத்து, நெற்றியில் பொட்டு, தலையை விரித்து போட்டபடி நடிகை பாவனா கொடுத்துள்ள போஸ், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.
கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

96 படத்தின் ரீமேக்
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான 96 படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார்.

பஜரங்கி 2
இதையடுத்து தொடர்ந்து நடித்துவரும் அவர் இப்போது, பஜரங்கி 2 என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான பஜரங்கி படத்தின் அடுத்த பாகமான இதை, ஹர்ஷா இயக்குகிறார்.

ஆக்ரோஷ லுக்
இதன் ஷூட்டிங் ஷிவமோகாவில் நடந்து வருகிறது. இதில் ஹீரோயினாக நடிக்கும் பாவனாவின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கழுத்தில் தாயத்து, நெற்றியில் பெரிய பொட்டு, தலையை விரித்துபோட்டபடி ஆக்ரோஷமாக இருக்கிறார் பாவனா.

பார்த்திராத கேரக்டர்
வித்தியசமான தோற்றத்தில் இருக்கும் அவரது லுக், வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றி இயக்குனர் ஹர்ஷா கூறும்போது, இதுவரை பார்த்திராத கேரக்டரில் பாவனா நடித்திருக்கிறார். இது புதிரான கேரக்டர். இதற்கு மேல் அவர் கேரக்டர் பற்றி பேசினால், முழுக் கதையை சொன்னது போலாகிவிடும் என்றார்.


Click it and Unblock the Notifications











