கன்னட தயாரிப்பாளரை காதலித்து மணக்கும் பாவனா!

By Shankar

சென்னை: கன்னடப் படத் தயாரிப்பாளர் நவீனை காதலிக்கும் நடிகை பாவனா, விரைவில் அவரை திருமணம் செய்கிறார்.

'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. அசல், தீபாவளி, ஜெயம் கொண்டான், கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்த அவர், தமிழில் வாய்ப்பு குறைந்ததால் தெலுங்குப் பக்கம் போனார்.

கன்னடத்தில்..

கன்னடத்தில்..

அங்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. கடைசியாக கன்னடப் படவுலகில் தஞ்சம் புகுந்தார். அங்கு சில படங்களில் நடித்தார். இப்போது மைத்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் மலையாளத்தில் நான்கு படங்களில் பிஸியாக இருக்கிறார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கன்னட படங்களில் நடித்து கொண்டிருந்த போது பாவனாவுக்கு, நவீன் என்ற கன்னட பட அதிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். பாவனாவும், நவீனும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு 2 பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள்.

ஆகஸ்டில் திருமணம்

ஆகஸ்டில் திருமணம்

அதைத் தொடர்ந்து பாவனா - நவீன் திருமணம் வருகிற ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.

கேரளாவா பெங்களூரா?

கேரளாவா பெங்களூரா?

திருமணம் கேரளாவில் நடத்துவதா? அல்லது பெங்களூரில் நடத்துவதா? என்பது பற்றி 2 பேரின் பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X