எஸ்.ஜேவுக்கு பாவனா ஓ.கே.!
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வில் படத்தில் அவருக்கு ஜோடி போட தெற்றுப் பல் அழகி பாவனா ஓ.கே. கூறியுள்ளாராம்.
நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி ஆகிய படங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி போட்டு நடிக்க நடிகைகள் பயந்து அலறினர். இதனால் அவர் படங்களில் முன்னணி ஹீரோயின்கள் ஜோடி கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள வில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்வந்துள்ளார் பாவனா. இப்படத்தை இயக்கப் போவது பிரபாகர்.
முதலில் எஸ்.ஜே.சூர்யாவே இந்தப் படத்தில் நடிக்கும் ஐடியாவில் இல்லையாம். இருந்தாலும் அவரிடம் கதையைக் கூறி கன்வின்ஸ் செய்து சம்மதிக்க வைத்துள்ளார் பிரபாகர்.
இந்தப் படத்தில் சூர்யா, உடல் ஊனமுற்றவராக நடிக்கிறாராம். அவருக்கு யாரை ஜோடியாகப் போடலாம் என்று இயக்குநரும், சூர்யாவும் யோசித்துள்ளனர். கடைசியில் பாவனாவை ஜோடியாகப் போடலாம் என தீர்மானித்தனர். இதையடுத்து பாவனாவை அணுகினர்.
ஆனால் பாவனா முடியாது என்று முதலில் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் படம் குறித்து தான் தயாரித்து வைத்திருந்த டிரைலரை பாவனாவுக்குப் போட்டுக் காட்டினார் பிரபாகர் (இப்படித்தான் சூர்யாவுக்கும் டிரைலர் காட்டி சம்மதம் வாங்கினாராம்).
அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகி விட்டாராம் பாவனா. இதையடுத்து தனது முடிவை மாற்றிக் கொண்டு நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
அப்ப, அடுத்து பாவனா - எஸ்.ஜே.சூர்யா குறித்தும் நிறைய செய்திகளை எதிர்பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











