தெலுங்கில் பிசியாகும் பாவனா

மலையாளத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிலிருந்து மலையாளத்துக்கும் மாறிய பாவனா இப்போது தெலுங்குக்குத் தாவியுள்ளார்.
தெலுங்கில் அவர் நடித்துள்ள முதல் படமான ஒண்டரி ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. படத்தில் பாவனா கிளாமரிலும் பிரமாதப்படுத்தியுள்ளாராம்.
இந்தத் தகவல் பரவியது முதல் டோலிவுட்டில் பாவனாவுக்கு கிராக்கி ஏற்பட ஆரம்பித்துள்ளதாம்.
பாவனாவுடன் ஜோடி போட பல ஹீரோக்கள் ஆர்வமாக உள்ளனராம். அதேபோல பாவனாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க இயக்குநர்களுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாம்.
தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளரான எம்.எஸ்.ராஜு தனது அடுத்த படத்தில் நடிக்க வருமாறு பாவனாவை அழைத்துள்ளார். இவர் திரிஷா நடித்த நுவ்வொஸ்தாண்டே .. உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்தவர்.
தனது புதிய படத்தில் தனது மகன் சுமந்த் அஸ்வினை நாயகனாக்குகிறார் ராஜு. அவருக்கு ஜோடியாக நடிக்கத்தான் பாவனாவை அழைத்துள்ளார் ராஜு. படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறாராம்.
தேஜா படத்தை இயக்கவுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாம்.
--


Click it and Unblock the Notifications











