வடிவேலுவுடன் ரொமான்ஸா.. ஸ்நேக் பாபு செய்த அட்டகாசம்.. பாவனா ஓப்பன் டாக்!
சென்னை: வாழ்த்துகள், வெயில், தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா. எதிரி படத்தில் வடிவேலுடன் இடம்பெறும் காமெடி காட்சிகளில் ஸ்நேக் பாபு கதாப்பாத்திரம் குறித்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மனம் திறந்து பேசியுள்ளார். அதில், வடிவேலு அட்டகாசம் பண்ணிவிட்டாராம். இன்றைக்கும் அந்த மொமண்டை மறக்க முடியாது என பாவனா தெரிவித்துள்ளார்.
15 வருடங்களுக்கு பிறகு தி டோர் படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் பாவனா. அவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும், தீபாவளி படத்தில் அவர் நடித்த சுசி ரோல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அசல் படத்திற்கு பிறகு மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்த அவர் தனது வாழ்வில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து மீண்டும் மனதிற்கு பிடித்த கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சித்திரம் பேசுதடி வாய்ப்பு: தி டோர் படத்தின் புரோமோஷனுக்காக யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வரும் பாவனா, தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது குறித்து சுவாரஸ்யத்துடன் தெரிவித்திருக்கிறார். அதில், "முதன் முதலில் சித்திரம் பேசுதடி படத்தில் நடித்தாலும், அதற்கு முன்பே பல வாய்ப்புகள் கிடைத்தன. நான் தான் தமிழில் நடிக்க தயங்கினேன். ஆனால், மிஷ்கின் சார் என்னை தேடி திருவனந்தபுரம் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் கதை சொல்ல சொல்ல எனக்கு பிடித்திருந்தது. அந்த கேரக்டர் எனக்கு பிடிச்சதால நடிக்க ஓகே சொன்னேன், என் அப்பா கொஞ்சம் தயங்குனாரு. நான்தான் அவரிடம் பேசி புரிய வைத்து நடிச்சேன். அதன் பிறகு தான் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனேன்" என பாவனா தெரிவித்தார்.
மலையாள சினிமா: மம்மூக்கா, லால்சேட்டா இவங்க 2 பேரும் லெஜண்ட். அவங்க இரண்டு பேரிடம் நிறைய கத்துக்கலாம். ரொம்ப சின்சியரா இருப்பாங்க. அவங்க கூட நடிக்கும் போது ஒரு பள்ளிக்கூடத்தில் பாடம் கத்துக்குற மாதிரி இருக்கும். எனக்கு பிடித்த மலையாள இயக்குநர்கள் இப்போ ரொம்ப வியக்க வைக்கும் படங்கள் பன்றாங்க. குறிப்பா கமல், பிரியதர்ஷன், அன்வர் ரஷீத் சார் போன்றோருடன் பணியாற்றியது ரொம்ப ஹேப்பியா இருக்கு என சிரித்துக்காெண்டே பாவனா தெரிவித்தார்.
ஸ்நேக் பாபு: எதிரி படத்தில் வடிவேலு ஸ்நேக் பாபு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் பாவனாவை அவர் காதலிப்பது போன்ற காட்சிகளில் அதகளம் பண்ணியிருப்பார். இதுகுறித்து பேசிய பாவனா, அய்யோ அதை என்னால மறக்கவே முடியாது. அவர் கையை வச்சுக்கிட்டு ஸ்நேக் பாபு.. ஸ்நேக் பாபு சொல்லும் போது பயங்கரமா சிரிப்பு வந்தது. சிரிக்காம டேக் வாங்குறது ரொம்ப கஸ்டம். நா மாதவனை ரவுடியா மாத்த ட்ரை பண்ணுவேன் அப்ப இவர் பன்றதெல்லாம் பார்த்து கோபம் வரணும். அவர் நடிக்கும் போது கொஞ்சம் பயம் தான். கையை ஸ்நேக் மாதிரி நீட்டி பேசி வந்தார்.

எதுடா உன்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுச்சு என கேட்கும் மாடுலேசன்லா பார்த்தப்ப சிரிப்பை அடக்க முடியலை. அய்யோ அவர் மாதிரி காமெடி பண்ண முடியாதுங்க என்று பாவனா தெரிவித்தார். இந்த காமெடி கொரோனா டைம்லை டிரெண்ட் ஆனது ஹேப்பி தான். இப்பவும் அந்த காமெடியை ஃபேன்ஸ் பார்த்து சிரிக்குறாங்க. அதைப்பத்தி என்கிட்ட கேட்குறாங்க எனக் கூரிய பாவனா வடிவேலு மாதிரியே பேசி காண்பித்தார். அவர் ரொமான்ஸ் பண்ணனும் நான் அவர்கிட்ட துப்பாக்கியை காட்டி பயமுறுத்தனும் செம சேலஞ்ச் தான் என பாவனா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











