பாவனாவின் பாவாடை தாவணி.. பரவசமூட்டும் பிளாஷ்பேக்.. நெருங்கிய தோழிகள் !
சென்னை : நடிகை பாவனா பகிர்ந்த த்ரோபேக் புகைப்படங்களை ரம்யா நம்பீசனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் பல நடிகைகள் தங்களின் திறமையை வைத்தும், கவர்ச்சியை வைத்தும் பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களின் தோற்றம் சில நேரம் ஒல்லியாக இருந்தாலும் சரி, தளதளவென இருந்தாலும் சரி கண்டிப்பாக அனைவராலும் ரசிக்கப்பட்டு வருவார்கள்

சிம்ரன் போன்றவர்கள் மிக ஒல்லியாக இருந்தாலும் அவர்களின் அழகான கவர்ச்சி நம்மை கவர்ந்து விடும், குஷ்பு போன்றவர்கள் தளதளவென இருந்தாலும் அவர்களின் குரல், நடனம் போன்றவை நம்மை மயக்கி விடும்.

அந்த வரிசையில் நடிகை ரம்யா நம்பீசனும் வருவார். அழகான முகம், ஹோம்லி லுக் என பல அம்சங்கள் அவரிடம் உள்ளது. மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
குள்ளநரி கூட்டம், சேதுபதி, பீட்ஸா போன்ற படங்களில் அனைவரும் பாராட்டும் விதமாக நடித்தார். நடிப்பது மட்டுமின்றி 26 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். இதுமட்டுமில்லாமல் இவர் ஆரம்ப காலத்தில் தியேட்டர் ஆர்டிஸ்டாகவும் இருந்து வந்தார்.

இவர் ஆரம்ப காலங்களில் குழந்தை கதாபாத்திரமாக மலையாளத்தில் நடித்துள்ளார். அத்துடன் தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபகாலமாக பல பாடல்களை பாடி தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதிலும் வாரணம் ஆயிரம் படத்தில் வரும் "அனல் மேலே பனித்துளி" பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இவரை போலவே மற்றுமொருவர் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பலரும் விரும்பும் ஒரு நடிகையாவார். இன்றும் நம் தொலைக்காட்சிகளில் "கண்ணன் வரும் வேலை" பாடல் கேட்டால் தனி ஒரு தாளம்தான் அந்த சுசி இன்றும் நினைவில் இருக்கிறாள். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் அவர் கடத்தப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானார். இருப்பினும் இன்றளவும் மலையாளம் மற்றும் தமிழில் பேசப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது தான் உண்மை.

பாவனாவும் ரம்யா நம்பீசனும் நெருங்கிய நண்பர்கள்இருவரும் சேர்ந்திருப்பது போல் பல போட்டோக்கள் உள்ளன. ஆனால் யாரும் அதிகம் பார்த்திராத போட்டோ ஒன்றை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் பாவாடை தாவணி அணிந்து அழகாக காணப்படுகிறார்கள். அந்த ஸ்டோரியை ரம்யா நம்பீசனும் அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பு இன்றளவும் அப்படியே உள்ளது.


Click it and Unblock the Notifications











