விடுதலை ஹீரோயினுக்கு பட வாய்ப்புக் கிடைக்கலையா?.. ஜி.வி. பிரகாஷின் தங்கையின் டிமாண்ட் இதுதானா?
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் சகோதரி பவானிஸ்ரீ க/பெ. ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாக உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அவர் தொடர்ந்து போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்த விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக "வழி நெடுக காட்டுமல்லி" என பாடல்களில் அசால்ட்டு காட்டி நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து அவர் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விடுதலை படத்திற்கு பிறகு அவருக்கு அதிகளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகின்றன.

விடுதலை ஹீரோயின்: விஜய்சேதுபதியுடன் க/பெ. ரணசிங்கம் படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ மீண்டும் விஜய்சேதுபதி நடித்த விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தார். தமிழரசி கதாபாத்திரத்தில் நடித்த இவர் இது என்ன மாயம் மற்றும் சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். இளம் நடிகையான பவானிஸ்ரீ ஹீரோயினாக முதல் படத்திலேயே வெற்றிமாறன் இயக்கிய நிலையில், அவருக்கு பட வாய்ப்புகல் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.
பல படங்களில் நடித்து வரும் சூரி: விடுதலை 2 படத்தில் சூரி நடித்து வரும் நிலையில்;, விடுதலை படத்திற்கு பிறகு பல படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி நடித்து அசத்தி வருகிறார். கொட்டுக்காளி, கருடன், ஏழு கடல் ஏழு மலை என வரிசை கட்டி சூரிக்கு பல படங்கள் குவிந்து வருகின்றன. விஜய்சேதுபதியும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை விடுதலை 2 படத்தில் நடித்துக் கொண்டே பிசியாகத்தான் வலம் வருகிறார். ஆனால், பவானிஸ்ரீக்கு புதிய படங்கள் ஏதும் கிடைக்கவில்லையேஎ? ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நண்பன் ஒருவன் வந்த பிறகு: இயக்குநர் ஆனந்த் ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் மூலமாகத்தான் பவானிஸ்ரீ ஹீரோயினாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த படத்திலும் இவர் ஏற்கனவே நடித்து முடித்த நிலையில், படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: புதிய படங்கள் கிடைக்காத நிலையில், பவானிஸ்ரீ இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகி பல போட்டோக்களை சமீப காலமாக தொடர்ந்து போட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்றே கூறுகின்றனர்.
ஆடையின்றி நடித்து மிரட்டினார்: விடுதலை படத்தில் வொர்க்ஷாப் விசாரணையின் போது பவானிஸ்ரீ ஹீரோயினாக நடித்திருந்தாலும் அவரது ஆடையையும் உருவி போலீஸார் அடித்து துவைத்தெடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றன. இவ்வளவு போல்டாக நடித்த பவானிஸ்ரீக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்கிற டிமாண்ட் இருப்பதால் தான் அடுத்தடுத்த படங்களை அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் வெயிட் பண்ணி நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவிலேயே விடுதலை 2 மற்றும் இன்னும் சில படங்கள் மூலமாக மிரட்ட காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











