»   »  பாவனாவின் பூஜை

பாவனாவின் பூஜை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது பிறந்த நாளையொட்டி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தி கடவுளை வணங்கினாராம் பாவனா.

பாவனாவுக்கு நேற்று ரொம்பவும் விசேஷ தினம். அவரது தாய் மொழியான மலையாளத்தில் சொல்ல வேண்டுமானால் நேற்று பாவனாவின் ஜென்ம தினம் (தமிழில் பிறந்த நாள்).

மார்க்கெட் ஏறுமுகமான இருந்தாலும் சிக்கல்களும் சொதப்பல்களும் கூடவே வருவதால் கவலையில் இருக்கும் பாவனா தனது பிறந்த நாளையொட்டி கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை நடத்தி மனமுருக அம்மனை வேண்டிக் கொண்டாராம்.

பாவனா கையில் இப்போது தமிழில் நான்கு படங்கள் உள்ளன. மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படம் உள்ளதாம். தமிழில் வாழ்த்துக்கள், ஆர்யா, மாதவனுடன் ஒரு படம், ராமேஸ்வரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பாவனா. ஜீவாவுடன் இன்னொரு படத்திலும் நடிக்க பேச்சு நடந்து வருகிறதாம்.

பாலாவின் நான் கடவுள் படத்தில் புக் ஆகி, முதல் ஷெட்யூலிலும் நடித்த பாவனா இப்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக அவர் நீக்கப்பட்டார். இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளாம்.

இந்த நிலையில் அடுத்தடுத்து கையில் இருக்கும் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் பாவனா.

ஹேப்பி பர்த்டே பாவனா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil