»   »  இது, பாவனாவின் தீபாவளி

இது, பாவனாவின் தீபாவளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிசி பாப்பா பாவனா லிங்குச்சாமி தயாரிப்பில், எழில் இயக்கத்தில் உருவாகவுள்ளதீபாவளி படத்தில் நடிக்கவிருக்கிறார். ஜெயம் ரவிதான் ஹீரோ.

இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாக மாறி படங்களை எடுப்பது இப்போதைய பேஷன்.சேரன், சரண், பாலா, அமீர் வரிசையில் இப்போது இயக்குனர் லிங்குச்சாமியும்சேர்ந்துள்ளார்.

ஹீரோவாக நடிக்கக் கூடிய அளவுக்கு அம்சமாக இருக்கும் இயக்குனர்களில்லிங்குச்சாமியும் ஒருவர். இருந்தாலும் நடிக்க மாட்டேன் என்று வீம்பாக இருந்துவருகிறார்.

இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் என்றபெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள லிங்குச்சாமி தயாரிக்கும் முதல்படம் தீபாவளி.

துள்ளாத மனம் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, அமுதே என சில வெற்றிப்படங்களை இயக்கியவரான எழில்தான் தீபாவளியை இயக்கப் போகிறார்.

பக்காவான காதல் கதையாக இதை உருவாக்கியுள்ளார் எழில். அதே சமயம்பட்டையைக் கிளப்பும் ஆக்ஷன் காட்சிகளையும் கோர்த்து விட்டுள்ளாராம்.

மென்மைக்கு பாவனாவும், புயலுக்கு ஜெயம் ரவியும் சேர்ந்து தூள் கிளப்பப்போகிறார்களாம். சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் முடித்துள்ள ரவி, இப்போதுதீபாவளிக்கு வருகிறார். படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

படத்தின் பூஜையே இப்போதுதான் போட்டார்கள். ஆனால் அதற்குள் 2 பாடல்களைகம்போசிங் செய்து முடித்து விட்டாராம் யுவன். அதில் ஒரு பாடலை கபிலனும்,இன்னொரு பாடலை முத்துகுமாரும் எழுதியுள்ளனர்.

காதலும், மோதலும் கலந்த அட்டகாசமான கதையை உருவாக்கியுள்ள எழில், 30நாட்களுக்குள் படத்தை முடிக்கும் திறமை படைத்தவர். அவர் கையில் இப்படத்தைஒப்படைத்திருப்பதால் தான், படத்தை தீபாவளிக்கு ரீலீஸ் செய்து விடலாம் என்றநம்பிக்கையில் தீபாவளி என டைட்டில் வைத்துள்ளாராம் லிங்குச்சாமி.

Read more about: bhavna in deepavali

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil