சூர்யாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பாவனா
சென்னை: நடிகர் சூர்யாவுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சூர்யா. சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யாவைச் சந்தித்துள்ளார்.
அப்போது அவருடன் இணைந்து செல்ஃபி ஒன்றையும் அவர் எடுத்துள்ளார். அப்புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாவனா.
முன்னதாக ரக்ஷாபந்தன் சமயத்தில் விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சித் தொகுப்பாளரான ரம்யாவும், இதேபோல் சூர்யாவுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபியை சமூக வலை தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். கூடவே, சூர்யாவைத் தனது ‘அண்ணா' என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications