பாத்ரூம்ல எதுக்குமா போட்டோஷூட்.. வைரலாகும் நிதி அகர்வாலின் ஹாட் போட்டோ.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: ஜெயம் ரவியின் பூமி பட நாயகியான நிதி அகர்வால், பாத்ரூமில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த 2017ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான முன்னா மைக்கேல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.
டைகர் ஷெராஃப் ஹீரோவாக நடித்த அந்த படத்தில் நவாஸுதின் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

4 மொழிகளில்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என இதுவரை 4 மொழிகளில் நடித்துள்ளார் நிதி அகர்வால். ஹைதராபாத்தில் பிறந்த நிதி அகர்வால், பெங்களூரில் வளர்ந்து, பின்னர் பாலிவுட்டில் அறிமுகமனார். இதன்மூலமாக தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளை சர்வ சாதாரணமாக பேசும் ஆற்றல் கொண்டவர். பூமி படத்தில் நடித்ததன் மூலம் தமிழும் இவருக்கு புரியும்.

பூமி
ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பூமி. இந்த முறை ஹன்சிகாவுக்கு பதிலாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வரும் இளம் நடிகையான நிதி அகர்வாலை ஜோடியாக்கி உள்ளார் இயக்குநர் லக்ஷ்மன்.

மே ரிலீஸ்
சமீபத்தில் வெளியான பூமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வரும் மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, பூமி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கலவரத்தால் பூமி படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகும் நிலை உருவாகி உள்ளது.
பாத்ரூமில் போட்டோஷூட்
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே லாக் டவுனில் இருக்கும் நடிகைகள், தங்களின் கவர்ச்சி புகைப்படங்களையும், தாங்கள் செய்யும் அன்றாட வேலைகள் பற்றியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பூமி பட நாயகியான நிதி அகர்வால் பாத்ரூமில் படுகவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் இதயங்களை நொறுக்கி வருகிறார்.
தொடையழகு
உள்ளாடை ஏதும் அணியாமல், வெறும் பாத்ரூம் கவுன் அணிந்து கொண்டு தொடையழகு தெரிய வித விதமான போஸ்களை கொடுத்து புகைப்படங்களாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். மேலும், தான் எந்தவொரு மேக்கப்பும் போடாமல், ஃபில்டர் யூஸ் பண்ணாமல் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

செம கலாய்
நிதி அகர்வாலின் இந்த படு கிளாமரான புகைப்படங்களை பார்த்து லட்சக் கணக்கான ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். சில குசும்புக்கார ரசிகர்கள், அந்த பாத் டிரெஸ்ஸை கழட்டிவிட்டு போட்டோ அனுப்புங்க என்றும், சில நெட்டிசன்கள், பாத்ரூமில் எதற்கு போட்டோஷூட் என்றும் கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர்.
மீசை மேல் ஆசை
குவாரண்டின் காலம் தொடங்கிய நிலையில், தனது கூந்தலை மீசை போல தனது உதடுகளுக்கு மேலே வைத்து எடுத்த செல்ஃபியை நடிகை நிதி அகர்வால் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலானார். மேலும், வீட்டில் புதுப்புது டிஷ் செய்தும், அதனை ருசிப் பார்க்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











