படிக்கட்டில் பவ்யமாக போஸ் கொடுக்கும் பூமிகா.. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் !
சென்னை : என்றும் இளமையாக இருக்கும் சில நடிகைகளுள் பூமிகாவும் ஒருவர்.தமிழில் பத்ரி படத்தில் அறிமுகமான நடிகை பூமிகா ,இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதே பொலிவுடன் இருப்பது ஆச்சர்யமான விஷயம் தான்.படிக்கட்டில் அழகாக போஸ் கொடுத்த பூமிகாவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
பத்ரி படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் பெற்றார் .தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி ,பஞ்சாபி ,போஜ்புரி,கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டார்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் பவ்யமாக வரும் பூமிகா ,இரண்டாம் பாதியில் தனது மிரட்டலான நடிப்பால் சூர்யா ரசிகர்களையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டார் .ரோஜா கூட்டம் ,யு-டர்ன்,கொலையுதிர் காலம் போன்ற படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
செலெக்ட்டிவாக படம் நடிச்சாலும்,தனது கதாபாத்திரம் உணர்ந்து நடிப்பதில் வல்லவர்.அதே போல் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பார் பூமிகா.எப்போதும் அழகான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களில் குடும்ப குத்துவிளக்காகவே காட்சிகொடுப்பார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் கருப்பு ,வெள்ளை உடையில் படிக்கட்டில் பவ்யமாக விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் .அதை பார்த்த பூமிகா ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர் .பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர் .அதிலும் ரசிகர் ஒருவர் எப்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்க வருவீங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார் .


Click it and Unblock the Notifications











