ஹீரோயின்
ஆட்டோகிராஃப் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. கேரள, கர்நாடகமாநிலங்களில் கூட கணிசமான வசூலைப் பெற்றுள்ளது.
ரூ. 3 கோடியில் தயாரான இந்தப் படம் இயக்குனர்-தயாரிப்பாளருக்கு ரூ. 10 கோடியை ஈட்டித் தந்துள்ளது.இந்திய- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியால் தேர்தல் பிரசாரம் கூட ஆங்காங்கே கூட்டமில்லாமல் களையிழந்துஇருந்த நிலையில் ஆட்டோகிராப்பை வெளியிட்டு வென்றுள்ளார் சேரன். இதனால் படா மகிழ்ச்சியில் இருக்கிறார்சேரன்.
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ரூ. 2 கோடிக்கு விற்று அதிலும் பெரும் லாபம் பார்த்துவிட்டார்சேரன்.
தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ள இந்தப் படத்தில் சேரன் கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கிறார்.கோபிகாவும், மல்லிகாவும் தமிழில் செய்த அதே கேரக்டர்களை தெலுங்கிலும் செய்கிறார்கள். ஆனால், ஸ்னேகாமட்டும் நடிக்கவில்லை. செய்த ரோலையே மீண்டும் செய்ய அவருக்கு விரும்பமில்லையாம்.
இதனால் தமிழில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் பூமிகாவை புக் செய்திருக்கிறார்கள். சுமார் 15 படங்களைஒதுக்கிவிட்டு இந்தப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்தாராம் பூமிமா. தமிழ் ஆட்டோகிராப்பைப் பார்த்துவிட்டுஅந்த அளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டாராம்.
தமிழில் பெயர் வாங்க முடியாத பூமிகா தெலுங்கிலும், ஹிந்தியிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ள நிலையில் இந்தப்படத்தில் தனது கேரக்டரைக் கேட்டதும் மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம்.ஒக்கடு, சிம்மாத்ரி படங்களைத்தொடர்ந்து பூமிகா நடித்து வெளிவந்த மிஸ் அம்மா படமும் தெலுங்கில் சூப்பர் ஹிட்.
சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்த தேரே நாம் (சேது படத்தின் ரீமேக்) ஹிந்திப் படம் கடந்த வருடம்வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். இப்போது ஹிந்தியில் சல்மான்கானுடன் மீண்டும் ஒரு படத்திலும்,அபிஷேக்பச்சனுடன் ஒரு படத்திலும் (ரன் படத்தின் ரீமேக்) நடித்து வருகிறார்.
வரிசையாக படங்கள் ஹிட் ஆனதால், அடுத்து படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.மிஸ் அம்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு வந்த 15 தெலுங்கு பட வாய்ப்புகளை ஒதுக்கி விட்டு,ஆட்டோகிராஃப் படத்துக்கு ஓகே செய்தாராம்.
இந்தப் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. கேரளாவிலும், ஹைதராபாத்திலும் படு சுறுசுறுப்பாய் நடந்துகொண்டிருக்கிறது படப்பிடிப்பு.


Click it and Unblock the Notifications











