இப்படி கழுவி ஊத்துறாங்களே.. நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட் நடிகை அணிந்து வந்த மோசமான உடை!

மும்பை: ஏப்ரல் 25ம் தேதி மும்பையில் நடைபெற்ற GQ விருதுகள் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக வந்த நிலையில், அவருக்கு போட்டியாக வெள்ளை நிற உடையில் பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் உள்ளாடை அணியாமல் வந்தது அனைவரையும் முகம் சுளிக்கவே வைத்து விட்டது.

ஃபேஷன் உடையில் கவர்ச்சிகரமாக நிகழ்ச்சிக்கு நடிகைகள் வந்தால் பலரும் அவர்களை ரசித்துப் பார்ப்பார்கள். ஆனால், பூமி பெட்னேகர் நேற்று அந்த நிகழ்ச்சியில் ஒயிட் கலர் கவர்ச்சி உடையில் கண்ட இடத்துல காத்து வாங்குவது போல உடை அணிந்து கொண்டு வந்த நிலையில், பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Bhumi Pednekar white cut out costume trolled by fans

பாலிவுட்டில் தென்னிந்திய நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல பாலிவுட் நடிகைகளுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காத நிலை உருவாகி வருகிறது. திஷா பதானி, ஜான்வி கபூர் உள்ளிட்டோர் தென்னிந்தியாவில் நடித்து வரும் நிலையில், பூமி பெட்னேகருக்கு எங்கேயும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

ஓடிடி பக்கம் ஒதுங்கிட்டாரு: இந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பிப்ரவரி 9ம் தேதி பூமி பெட்னேகர் நடித்த பாக்‌ஷாக் படம் வெளியானது. தியேட்டரில் வெளியான இவரது படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், ஓடிடி பக்கம் ஒதுங்கி விட்டார் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், மற்ற மொழிகளிலும் இவர் அதிகமாக கவனம் செலுத்துவதும் கிடையாது என்கின்றனர்.

கருப்பு உடையில் நயன்தாரா: நேற்று நடைபெற்ற ஜிக்யூ விருது விழா நிகழ்ச்சியில் கருப்பு நிற படுகவர்ச்சியான உடையில் நடிகை நயன்தாரா பங்கேற்று ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். ஆனால், பாலிவுட் நடிகையான பூமி பெட்னேகர் அந்த நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடையை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டாமல் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Bhumi Pednekar white cut out costume trolled by fans

உள்ளாடை அணியாமல்: வெள்ளை நிற கோட்டை கண்டபடி கிழித்துக் கொண்டு எல்லா இடங்களிலும் உடலின் பாகங்கள் அனைத்தும் எப்படி திரும்பினாலும் தெரியும் படி படுமோசமாக உடையை அணிந்துக் கொண்டு பூமி பெட்னேகர் அந்த விருது விழாவில் பங்கேற்றுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அடக்கருமமே என்றும் அடக்கன்றாவியே என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Bhumi Pednekar white cut out costume trolled by fans

மோசமான உடை: பூமி பெட்னேகர் அணிந்து வந்த உடை ரொம்பவே மோசமாக உள்ளதாகவும் உடல் மெலிந்து அவரது தோற்றமே சீக்கு வந்தவர் போல ரொம்ப கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் அணிந்து வந்த உடையும் அவருக்கு கொஞ்சம் கூட செட் ஆகலை என்றும் பட வாய்ப்பை பெற பிஆர் டீம் இப்படி எல்லாம் டிசைன் செய்து டிரெஸ் கொடுத்து போட சொல்லி வருகிறதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X