வேற வழியே இல்ல.. கவர்ச்சி கோதாவில் குதித்த விஜய் பட நடிகை.. வெப்சீரிஸில் இதுவரை இல்லாத அளவு தாராளம்!
ஆல் இல்யூசன்ஸ் சாப் ப்ராம் வெப் சீரிஸ்ல் நடிகை பூமிகா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
சென்னை: நடிகை பூமிகா ஒரு வெப் சீரிஸ்ல் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்ரி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பூமிகா 2000வது ஆண்டுகளில் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். பின்னர் சல்மான் கான் ஜோடியாக தேரே நாம் படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார். அவ்வப்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.

பூமிகா ரீஎண்ட்ரி
பூமிகா தற்போது தமிழில் மற்றும் தெலுங்கு படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்துள்ள ரூலர் திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது.

கவர்ச்சி ரோல்
பூ போல் மென்மையாக தோற்றமளிக்கும் பூமிகா, பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு வெப் சீரிஸ்ல் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாட் வெப் சீரிஸ்
ஆல் இல்யூசன்ஸ் சாப் ப்ராம் எனும் வெப் சீரிஸ் தானாம் அது. ஒரு நாவலாசிரியருக்கு ஏற்படும் மனப்போராட்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸ்ல், இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஹாட்டான காட்சிகளில் பூமிகா நடித்துள்ளாராம். அந்த வெப் சீரிஸ்ல் அவருடன் கல்கி கொச்சிலினும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த பூமிகா, கவர்ச்சியாக நடிக்க தான் தயங்கியதே இல்லை என தெரிவித்திருந்தார். செக்ஸ் காட்சிகளில் நடிக்கவும் தான் தயார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











