Bhumika Chawla: பீச்சில் குழந்தையை போல ஆட்டம் போட்ட பத்ரி பட நடிகை.. பூமிகாவின் செம பிக்ஸ்!

சென்னை: நடிகை பூமிகா சாவ்லா பீச்சில் குழந்தையை போல பீச்சில் தனது மகனுடன் ஆட்டம் போட்ட காட்சிகளை வீடியோவாக தொகுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரோஜாக் கூட்டம், பத்ரி, சில்லுனு ஒரு காதல் என ரொமான்டிக் ஹீரோயினாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் பூமிகா.

44 வயதை கடந்துள்ள நடிகை பூமிகா சாவ்லா இன்னமும் பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தில் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டி இருந்தார்.

Bhumika Chawla play like a child in Beach with her son photos out now

பத்ரி படத்தில் அறிமுகம்: 2000ம் ஆண்டு தெலுங்கில் வெளியான யுவகுடு படத்தில் அறிமுகமான பூமிகா சாவ்லா, 2001ம் ஆண்டு தமிழில் விஜய் நடித்து வெளியான சூப்பர் ஹிட் படமான பத்ரி படத்தில் அவருக்கு ஜோடியாக ஜானு எனும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார்.

அதே ஆண்டு தெலுங்கில் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக பூமிகா தான் நடித்திருந்தார். அந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த பூமிகாவுக்கு டோலிவுட்டில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்தன.

Bhumika Chawla play like a child in Beach with her son photos out now

இந்த வயதிலும் பிஸி: ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல் என தமிழில் வெகு சில படங்களிலேயே நடித்த நடிகை பூமிகா தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

44 வயதான நிலையில், இப்பவும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பூமிகா. இந்த ஆண்டு வெளியான உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே மற்றும் சல்மான் கானின் வீரம் இந்தி ரீமேக் படமான கிஸி கா பாய் கிஸி கி ஜான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Bhumika Chawla play like a child in Beach with her son photos out now

பீச்சில் மகனுடன் ஆட்டம்: நடிகர்கள் மற்றும் நடிகைகள் கோடை விடுமுறையை வெளிநாடுகளிலும் பீச், நீச்சல் குளங்களிலும் கொண்டாடி வரும் நிலையில், நடிகை பூமிகா தனது மகனுடன் பீச்சில் குழந்தையை போல ஆட்டம் போட்ட போட்டோக்களை வீடியோ தொகுப்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

2007ல் பரத் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பூமிகாவுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் பரத் தான் இந்த போட்டோக்களை எடுத்தார் என்றும் எதிர்காலத்திற்காக காத்திருக்காமல் இப்போதே கிடைக்கும் தருணங்களை ஜாலியாக செலவிடுங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார் பூமிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X