ஹீரோயினாகும் மிஸ் கூவாகம்! வம்புக்குப் பேர் போன மன்சூர் அலி கான் மீண்டும் படம் தயாரிக்கப் போகிறார். படத்தின் தலைப்பு "என்னைப்பார் யோகம் வரும்.இவரது ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஐந்தாவது படம் இது. "ராஜாதிராஜ ராஜகுலோத்துங்கராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்று மிக நீள டைட்டிலும், "இராவணன்,"வாழ்க ஜனநாயகம், "வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என வித்தியாசமான தலைப்புகளிலும் படங்களைத்தயாரித்த மன்சூர் அலி கான் இந்தப் படத்தையும் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார்.குறும்பும் ஓவர் குசும்பும் கலந்த பாடமாக இந்தப் படம் வரப் போகிறதாம். இதில் முக்கிய வேடத்தில் மும்தாஜ்நடிக்கிறார். பூனைக் கண்ணழகி புவனேஸ்வரியும் இருக்கிறார். இருவரும் சேர்ந்து கவர்ச்சி விருந்து படைக்கப்போகிறார்களாம்.படத்துக்கு புதுமுகங்கள் தேவைப்படுவதால் தமிழ் நன்கு பேசத் தெரிந்த புதுமுக கதாநாயகி மற்றும் இரண்டுவில்லன்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். தமிழ் தெரியாத மும்பை, கேரள, ஆந்திர நடிகைகள் பலரும் வாய்ப்புகேட்டு மன்சூரிடம் படையெடுத்து வருகின்றனர். அவர்களையெல்லாம் முதல்ல தமிழ் படிங்க என்று சொல்லிதிருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்.வினுசக்கரவர்த்தி, தாமு, கஞ்சா கருப்பு, நெல்லை சிவா, போண்டா மணி ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்தைதிரைக்கதை, வசனம் எழுதி ஜமீன்ராஜ் என்பவர் இயக்குகிறார்.படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த மன்சூரிடம் படம் குறித்து கேட்டபோது, வீட்டிலும் வியாபாரஸ்தலங்களிலும் கழுதை போட்டோவை மாட்டி என்னைப் பார்யோகம் வரும்னு வசனம் இருக்கும்.இந்தப் படத்துல மக்களுக்காக நான் பொதி சுமக்குறேன்.என்னோடு திருவாளர் கழுதையாரும், திருவாளர் குதிரையும்நடிக்கிறாங்க.உலகத்திலேயே யாருக்கும் பிரச்சனை தராத ஒருத்தர் இருக்கார்என்றார் அவர் கழுதையார் தான். அவர் சலவையாளர்களுக்கும்ராணுவத்துக்கும் செய்யிற உதவி இருக்கே.. அதைசொல்லிக்கிட்டே இருக்கலாம்.யாருக்கு சான்ஸ் அடிக்கப் போகுதோ

By Staff

வம்புக்குப் பேர் போன மன்சூர் அலி கான் மீண்டும் படம் தயாரிக்கப் போகிறார். படத்தின் தலைப்பு "என்னைப்பார் யோகம் வரும்.

இவரது ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஐந்தாவது படம் இது. "ராஜாதிராஜ ராஜகுலோத்துங்கராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்று மிக நீள டைட்டிலும், "இராவணன்,"வாழ்க ஜனநாயகம், "வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என வித்தியாசமான தலைப்புகளிலும் படங்களைத்தயாரித்த மன்சூர் அலி கான் இந்தப் படத்தையும் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார்.

குறும்பும் ஓவர் குசும்பும் கலந்த பாடமாக இந்தப் படம் வரப் போகிறதாம். இதில் முக்கிய வேடத்தில் மும்தாஜ்நடிக்கிறார். பூனைக் கண்ணழகி புவனேஸ்வரியும் இருக்கிறார். இருவரும் சேர்ந்து கவர்ச்சி விருந்து படைக்கப்போகிறார்களாம்.

படத்துக்கு புதுமுகங்கள் தேவைப்படுவதால் தமிழ் நன்கு பேசத் தெரிந்த புதுமுக கதாநாயகி மற்றும் இரண்டுவில்லன்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். தமிழ் தெரியாத மும்பை, கேரள, ஆந்திர நடிகைகள் பலரும் வாய்ப்புகேட்டு மன்சூரிடம் படையெடுத்து வருகின்றனர். அவர்களையெல்லாம் முதல்ல தமிழ் படிங்க என்று சொல்லிதிருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்.


வினுசக்கரவர்த்தி, தாமு, கஞ்சா கருப்பு, நெல்லை சிவா, போண்டா மணி ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்தைதிரைக்கதை, வசனம் எழுதி ஜமீன்ராஜ் என்பவர் இயக்குகிறார்.

படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த மன்சூரிடம் படம் குறித்து கேட்டபோது, வீட்டிலும் வியாபாரஸ்தலங்களிலும் கழுதை போட்டோவை மாட்டி என்னைப் பார்யோகம் வரும்னு வசனம் இருக்கும்.

இந்தப் படத்துல மக்களுக்காக நான் பொதி சுமக்குறேன்.என்னோடு திருவாளர் கழுதையாரும், திருவாளர் குதிரையும்நடிக்கிறாங்க.

உலகத்திலேயே யாருக்கும் பிரச்சனை தராத ஒருத்தர் இருக்கார்என்றார் அவர் கழுதையார் தான். அவர் சலவையாளர்களுக்கும்ராணுவத்துக்கும் செய்யிற உதவி இருக்கே.. அதைசொல்லிக்கிட்டே இருக்கலாம்.


யாருக்கு சான்ஸ் அடிக்கப் போகுதோ

படத்துக்காக தமிழ் தெரிஞ்ச ஹீரோயின் தேடுறேன். மிஸ்கூவாகம் போட்டியில வென்ற அரவாணியையே ஹீரோயினாஅறிமுகப்படுத்தலாமான்னு இருக்கேன் என்று குண்டுபோட்டார்.

தெரியாத்தனமாக படத்துல உங்க பேரு என்னங்க என்றுகேட்டோம்.. அதற்கு அவர் சொன்ன பதில்

இந்தப் படத்தில் என் பெயர் ஜெகதலப் பிரதாப வீரபத்ர ஞானதேசிக கருமாரி கந்தப்ப சிவசிங்காரவேலவருசநாட்டு வேங்கைமான் மதுரை மதனகோபால ஜவ்வாது சந்தன சமூண்டீஸ்வரன் என்ற ஜெகா என்றார்.ஆனாலும் ரொம்ப குசும்புய்யா.

ஜூன் ஒன்றாம் தேதி படப் பிடிப்பு தொடங்கி, சென்னை, குற்றாலம், தக்கலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில்ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாம்.

இது புவனேஸ் பிட்டு:

இதற்கிடையே புவனேஸ்வரிக்கு தென்மாவட்ட வீரமான பெண்மணியின் பெயரில் இயங்கும் பேரவையில்கொள்கை பரப்பு செயலளார் பதவி கொடுக்க போகிறார்களாம். கடந்த மாதமே இந்தப் பதவி தரப்படஇருந்ததாம்.

ஆனால், தேர்தல் நேரத்தில் நடிகைக்கு பதவி கொடுத்தால் ஆதாயத்துக்கு விளம்பரம் தேட வந்துட்டாங்க என்றுபிரச்சனை கிளம்பலாம் என்பதால் பதவி தருவதை தள்ளிப் போட்டதாம் அந்தப் பேரவை.

இப்போழுது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் புவனேசுக்கு பெரிய விழாவே நடத்தி கொ.ப.செ பதவி கொடுக்கபோவதாக சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X