Ramya Pandian: பக்குவமா பார்த்து பார்த்து மரம் நடும் ரம்யா பாண்டியன்.. கொடுத்து வச்ச மரம்!
சென்னை: நடிகை ரம்யாபாண்டியன் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து மரங்களை நட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
எப்போதும் லைம் லைட்டில் இருந்துகொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சிலர் பரபரப்பு பேட்டி கொடுப்பது, கருத்துச் சொல்கிறேன் என்று ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்புவது கதாநாயகிகளின் தனி ஸ்டைல்.

நடிகை ரம்யா பாண்டியன்: சினிமாவில் பட வாய்ப்பு வந்தா வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள் சில ஹீரோயின்கள். அவர்களின் நோக்கம், தங்கள் அழகை வித்தியாசமான கோணங்களில் போட்டோவாக்குவது, அதற்கு வரும் ரசிகர்களின் ஏடா கூட கருத்து வந்தாலும், இதற்காகவே ஸ்பெஷல் போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர்.

மொட்டைமாடி போட்டோஷூட்: அப்படி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்யாமல், மொட்டைமாடியில், வளைந்து நெளிந்து இருக்கும் தனது இடையழகை காட்டி போட்டோ எடுத்து ஒரே நைட்டில் பிரபலமாகிவிட்டார்.

இயற்கையின் பரிசு: போடோஷூட்டிற்கு பிறகு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த அழுத்தமான கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை. இருந்த போதும் இணையத்தில் புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர், இயற்கையின் பரிசுகளைப் போற்றுதல்: என்கிற கேஷனுடன் ஒவ்வொரு ஆண்டும் 143 மரக்கன்றுகளை நட்டு, வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் இயற்கையின் அழகை வளர்க்க மாநிலம் முழுவதிலும் இருந்து கூடிவரும் நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த நன்றி என கூறி அவர்களுடன் மரம் நட்டபோது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











