காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !

சென்னை : பிக்பாஸ் ஜூலியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

வழக்கம் போல் இவரது வீடியோவையும், புகைப்படத்தையும் நக்கலடித்து கலாய்த்து கொண்டு இருப்பவர்கள் கலாய்த்து கொண்டே தான் இருக்கின்றனர்.

தினம் தினம் அவர் வெளியிடும் புகைப்படங்களையும் சிறுசிறு வீடியோக்களையும் கலாய்ப்பதற்கு என்று ஒரு தனி கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. பலர் இவரை பாராட்டவும் செய்கின்றனர்.

பிக் பாஸ் ஆப்பு

பிக் பாஸ் ஆப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவருக்கும் பிரபலமானவர் தான் ஜூலி. புகழின் உச்சியில் இருந்த இவருக்கு ஆப்பு வைக்க வந்த வாய்ப்பு தான் பிக் பாஸ். ஜல்லிக்கட்டு புகழ் அவரை சினிமாத்துறையில் கால் பாதிக்க வாய்ப்பு தந்தது என்றும் சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு பல அவபெயர்கள் கிடைத்தது தான் மிச்சம்.

சொந்த காசில் சூனியம்

சொந்த காசில் சூனியம்

பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் நடந்து கொண்டதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அவரை நக்கலடிக்க ஆரம்பித்தனர். அப்போது ஆரம்பித்த நெட்டிசன்கள் இன்றும் தீராமல் நக்கலடித்துக் கொண்டும், அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் கிண்டல் அடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

கண்டுக்கவே கூடாது

கண்டுக்கவே கூடாது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களை விட இவருக்கு மவுசு அதிகமாகிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை.யார் என்ன கேலி செய்தாலும் கண்டுகொள்ளாமல் தனது வேளையில் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருக்கிறார் ஜூலி. தயவு செய்து யாராவது இவருக்கு வாய்ப்புகள் கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சிக் கேட்கும் அளவிற்கு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் நிரம்பி வழிந்து கொண்டு தான் உள்ளது.

கொடுத்த வாய்ப்பு

கொடுத்த வாய்ப்பு

எப்போதும் நெட்டிசன்கள் வாயில் சிக்கும் ஜூலி. எவ்வளவு உஷாராக இருந்தாலும் நெட்டிசன்கள் விட்டு வைப்பது போல் தெரியவில்லை. சாதாரணமாக போடும் புகைப்படத்திற்கு கூட பல கமெண்ட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ நெட்டிசன்களுக்கு இவரே ஒரு வாய்ப்பு கொடுத்தது போல் அமைந்து விட்டது.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

விஜய் நடித்த குஷி படத்தில் வரும் பாப்பு பாப்பு என்ற பாடலை , இவர் பாடும் மாதிரியான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் வழக்கம் போல் தங்களது வேலையை தொடங்கிவிட்டனர். பார்ப்பதற்கு ஜூலி மாதிரியே தெரியாத அந்த வீடியோவை பலரும் கலாய்த்து தள்ளியுள்ளனர். அதில் ஒரு நெட்டிசன் அது எப்படி நீங்க மட்டும் திடீர்னு இவ்ளோ அழகா மாறிட்டிங்க என்றும், இன்னும் பலர் காசு வந்தா காக்கா கூட மயில் போல மாறிவிடும் என்று சொல்லுவாங்க அது உங்க விஷயத்துல உண்மை ஆயிருச்சு என்று கலாய்த்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள கமெண்டுக்கு பலரும் ரிப்ளை செய்து வருவது தான் ஆச்சர்யம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X