“ப்ளீஸ் அப்டி செய்யாதீங்க.. அப்புறம் ஜெயிக்க முடியாது” பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஓவியா அட்வைஸ்!

பிக் பாஸ் போட்டியாளர்கள் தன்னை போல் இமிடேட் செய்ய வேண்டாம் என நடிகை ஓவியா கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended Video

நடிகை ஓவியா பத்திரிகையாளர்கள் சந்திப்பு | Oviya | Saranya | A. Sarkunam | Kalavani 2 Press Meet

சென்னை: தன்னை போல் நடந்துகொள்வதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுவிட முடியாது என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா ஏற்படுத்திய தாக்கம் அந்நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியில் இன்னும் போகவில்லை. கடந்த சீசனிலும் சரி இந்த சீசனிலும் சரி, எல்லோருமே ஓவியாவாகிவிட வேண்டும் எனும் திட்டத்துடன் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் அடிஎடுத்து வைக்கிறார்கள்.

இந்த சீசனில் அபிராமி, மீரா, சாக்ஷி, மதுமிதா, வனிதா என பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அனைவரும் ஓவியாவாகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் யாராலும் ஓவியா அளவுக்கு புகழ் பெற முடியவில்லை.

இந்நிலையில் களவாணி 2 பட விளம்பர நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் ஓவியா. அப்போது அவரிடம், பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் உங்களை போலவே இமிடேட் செய்கிறார்களே கவனித்தீர்களா? எனக் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

தோன்றியதை செய்தேன்

தோன்றியதை செய்தேன்

"நான் கலந்துகொண்டது பிக்பாஸ் முதல் பாகத்தில். அப்போது எந்த ஐடியாவும் இல்லாமல் சென்றேன். வெளியில் என்ன நடந்தது என்பதுகூட எனக்குத் தெரியாது. எனக்கு என்ன தோன்றியதோ அதைச் செய்தேன். சுதந்திரமாக இருந்தேன். அதனால் மக்களுக்கு பிடித்து போனது", என்றார்.

காப்பி அடிக்காதீங்க

காப்பி அடிக்காதீங்க

மேலும் "இப்போது அப்படி இல்லை. என்னை காப்பி அடிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பதிலாக இயல்பாக இருந்தாலே போதும். எனக்கு எதிரிகளோ நண்பர்களோ கிடையாது. எதிரி என்று யார் இருந்தாலும் உடனே நண்பராக்கி கொள்வேன்", என ஓவியா கூறினார்.

புகழை பயன்படுத்திக்கொள்ளவில்லை

புகழை பயன்படுத்திக்கொள்ளவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று குறை சொல்கிறார்களே? என கேட்டதற்கு, " நான் என் தேவைகளுக்கு போதுமான அளவுக்கு சம்பாதித்துவிட்டேன். அது போதும்", என ஞானி போல் பதிலளித்தார்.

திருமணம் எப்போது?

திருமணம் எப்போது?

கடைசியாக திருமணம் எப்போது? எனும் கேள்வியையும் காதில் போட்டோம். அதற்கு அவர் தந்த பதில் செம ஷாக்கிங். "நான் திருமணமே செய்துகொள்ளப்போவது இல்லை. எனக்கு ஆண் துணை தேவையே இல்லை. தனியாக இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே திருமணம் வேண்டாம். எதிர்காலத்தில் என் மனது மாறினால் பார்ப்போம்", என ஓவியா ஆர்மிக்கு பல்ப் கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X