எதுவும் ஆகாம பார்த்துக்கப்பா.. பிக் பாஸ் அபிராமி எங்க பியர்ஸ் பண்ணியிருக்காரு பாருங்க!

சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான அபிராமி வெங்கடாச்சலம் புதிதாக பியர்ஸ் பண்ணியுள்ள வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். டாட்டூ போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட அபிராமி தற்போது பியர்ஸிங்கிலும் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் அபிராமி வெங்கடாச்சலம். அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

Bigg Boss Abhirami Venkatachalam latest piercing video goes viral
Photo Credit:

ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 1ல் பங்கேற்ற அபிராமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அபிராமி வெங்கடாச்சலம்: நோட்டா படத்தில் அறிமுகமான அபிராமி வெங்கடாச்சலத்துக்கு நேர்கொண்ட பார்வை பெரிய படமாக அமைந்தது. மாதவனின் ராக்கெட்ரி நம்பி விளைவு, வான் மூன்று, தீயவர் குலைகள் நடுங்க, வல்லான் மற்றும் அனந்தா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். விக்ரமின் ரிலீஸ் ஆகாத துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரபலமான அபிராமி வெங்கடாச்சலத்துக்கு இன்னமும் அவருக்கு தீனிப்போடும் அளவுக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

காது குத்திய அபிராமி: ஏற்கனவே சிறு வயதிலேயே காது குத்தி கம்மல் எல்லாம் போட்டுக் கொண்ட நிலையில், தற்போது காதின் மேல் பகுதியில் பியர்ஸிங் செய்துள்ளார் அபிராமி வெங்கடாச்சலம். "எதுவும் ஆகாம பாத்துக்கப்பா" என இருகரம் கூப்பி கடவுளை வேண்டி காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். ஏற்கனவே டாட்டூக்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட அபிராமி தற்போது பியர்ஸிங்கிலும் தனது நாட்டத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 34 வயதாகும் அபிராமி நெருஞ்சி எனும் படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X