Sakshi Agarwal: கிளாசுல என்ன சரக்கா? மெத்தை மீது ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் கையில் கிளாசை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மாடலிங் மூலம் திரையுலகில் நுழைந்த சாக்ஷி அகர்வால் இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது வளர்ந்த வரும் நடியாக இருக்கும் இவர், முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இணையத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகர் சாக்ஷி அகர்வால்: 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இந்த படத்தைத் தொடர்ந்து அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். அதன் பின் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நான்கு மருமகளில் ஒருவராக நடித்திருந்தார்.
பிக் பாஸ் சீசன்3: இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியாக காதல் டிராக் ஓடிக்கொண்டு இருக்க, சாக்ஷி அகர்வாலும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த சீசனுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியமான முகமாக மாறினார். இதையடுத்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.
அடுத்தடுத்த படங்களில்: தற்போது ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் சாக்ஷி அகர்வால், விருந்தினர்: அத்தியாயம் 2, அந்த இரவு,புரவி,120 மணிநேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அண்மையில் இவர், எஸ்.ஏ. சந்திர சேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
ஜூசா இல்ல சரக்கா: இணையத்தில் படு ஆக்டிவ் சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், வாழ வைத்த ரசிகர்களை மறக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு தினமும், வலைத்தள பக்கத்தில் அதிரிபுதிரியாக கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இதனால் இவரது ரசிகர்கள் இவரை பின் தொடர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது, கையில் கிளாசை வைத்துக்கொண்டு மொத்தை மீது, அனிமல் படத்தில் வரும் அந்த பிரபலமான பாடலுக்கு நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஜூசா இல்ல சரக்கா என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











