இது என்ன New year Vibe ஆ.. நீச்சல் உடையில் ரசிகர்களை அலறவிட்ட சாக்ஷி அகர்வால்!

சென்னை: சோஷியல் மீடியாவில் விதவிதமான ரீல்ஸ், கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் சாக்ஷி அகர்வால், நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ரசிகர்களின் பேராதரவை பெற்ற சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், கலந்து கொண்டனர். அந்த சீசனில், பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். வட மாநிலத்தைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால், சிறுவயது முதலே மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். பல தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

bigg boss actress sakshi agarwal latest photos

இதையடுத்து சினிமா வாய்ப்பை தேடி அலைந்த சாக்ஷிக்கு அட்லீ இயக்கத்தில் வெளியான நய்ன்தாரா, ஜெய், சத்யராஜ் நடித்த ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில், நைட்டியை போட்டுக்கொண்டு காபி கேட்கும் நகைச்சுவை காட்சியில் நடித்திருந்தார். அதன் பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்திருந்தார்.

கைவசம் உள்ள படங்கள்: அதன் பின் டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் அண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து, Guest : Chapter 2, தி நைட்,புரவி,120 மணிநேரம், குறுக்கு வாழி, ஆயிரம் ஜென்மங்கள் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தாய்லாந்தில் சூப்பர் போஸ்: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த, அண்மையில் இவர் கையில் கிளாசை வைத்துக்கொண்டு மொத்தை மீது, அனிமல் படத்தில் வரும் அந்த பிரபலமான பாடலுக்கு நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது தாய்லாந்து நாட்டுக்கு ஜாலி டூர் போய் உள்ள சாக்ஷி அகர்வால், ஹோட்டலில் இருந்து, முதல் முறையாக பிகினி உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில்ர மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X