Shivani Narayanan: இளசுகளுக்கு ஓணம் விருந்து வச்ச ஷிவானி நாராயணன்.. நெய் பாயாசம் கேட்கும் பேன்ஸ்!
சென்னை: எந்த பண்டிகை வந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் போஸ்ட் போடும் நடிகை ஷிவானி நாராயணன் தனது ரசிகர்களுக்காக ஓணம் பண்டிகைக்கு ஸ்பெஷல் விருந்து வைத்துள்ளார்.
சின்னத்திரை சீரியலின் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் லீட் ரோலில் நடித்திருந்தார். இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துப் பேமஸ் ஆனார். சீரியலில் கிடைத்த வரவேற்பால், கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக் முறை பெண்ணாக நடித்திருந்தார்.

ஷிவானி நாராயணன்: இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 4ல் குட்டி டவுசருடன் தொடை அழகை காட்டி வலம் வந்தார். அப்போது, பாலாவுடன் சில கிசு கிசுவில் சிக்கினார். இருவரும் காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், பாலாவின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டு, பாலா என் அண்ணா என்று குண்டை தூக்கிப் போட்டார். இதற்கு பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன.
வெள்ளித்திரையில்: இதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கி உலகநாயகன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் இரண்டாவது மனைவியாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். மனைவி என்று பெயருக்கு வந்து போன ஷிவானிக்கு ஒரு டயலாக்கூட இல்லை. இருந்தாலும் படம் ஓடியதால் இவரும் பிரபலமானார். இதையடுத்து, காமெடி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் படத்திலும் நடித்திருந்தார். அண்மையில் ஷிவானி பம்பர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவ்: தற்போது கைவசம் பல படங்கள் இருந்தாலும் இணையத்தில் படு ஆக்டிவ்வாகப் போஸ்ட் போட்டு வருகிறார். டீ ஷர்ட்டுடன் கும்முனு இருக்கும் போட்டோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளினார். எந்த பண்டிகை வந்தாலும், பாரபட்சம் பார்க்காமல் வாழ்த்து சொல்லி போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார்.
நெய் பாயாசம்: தற்போது ஷிவானி நாராயணன், ஓணம் பண்டிகைக்கு அத்தப்பூ கோலம் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், ஓணம் விருந்து வச்சிட்டீங்க என்றும், நெய் பாயாசம் மிஸ்ஸிங் என்றும் கமெண்ட்டுகளை புகைப்படத்திற்கு கீழே பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











