கடல் தாண்டி காதலிக்கும் பிக் பாஸ் அர்ச்சனா.. வெளிநாட்டில் காதலருடன் செம ஜாலி!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் அருண் பிரசாத். அதே சீரியலில் நடித்து வந்த அர்ச்சனாவும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஜாலியாக ட்ரிப் சென்றுள்ள வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் வீஜேவாக இருந்த அர்ச்சனா ரவிச்சந்திரன், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் இருந்து விலகி, பிக் பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றார். அந்த சீசனில் பிரதீப் ஆண்டனி பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் கூறி வந்த நிலையில், வீட்டிற்குள் சென்றதுமே, பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் வரலாற்றில் அதுவரை வைல்டு கார்டு போட்டியாளராக வந்த எவரும் டைட்டிலை பெறாத நிலையில், முதன்முதலாக அர்ச்சனா டைட்டிலை வென்றார்.

Archana Ravichandran Arun Prasad
Photo Credit:

நடிகை அர்ச்சனா: இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக அருண் பிரசாத் கலந்து கொண்டார். அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு அர்ச்சனா தான் என்ற செய்தி பரவியது. ஏன் என்றால், பாரதி கண்ணம்மா சீரியலில் அருண் நடித்த போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது. இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அது, வெறும் வதந்தி என சொல்லப்பட்டு வந்த நிலையில், அர்ச்சனாவின் பிறந்த நாள் அன்று, பிக் பாஸ் வீட்டில் இருந்த அருண், கேமிரா முன் நின்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்தார். அதோடு மட்டுமில்லாமல், அருண் பிரசாத்தை பார்க்க, அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அருணுக்கு அறிவுகரை கூறிவிட்டு, யார் என்ன சொன்னாலும், நீ என் ஹீரோதான் என்று கூறி காதலை உறுதி செய்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் ஜோடியாக பல இடங்களில் வலம் வந்ததை பார்க்க முடிந்தது.

காதலுடன் வெளிநாட்டில்:அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனாவிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இருவரும் ஜாலியாக வெளிநாட்டுக்கு டூர் சென்றுள்ளனர். அர்ச்சனாவின் பிறந்த நாள் நவம்பர் 11ந் தேதி வந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான இருவரும் வெளிநாடு சென்று கொண்டாடி உள்ளனர். அந்த வீடியோ அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பிறந்தநாள் பயணம் ஒரு அற்புதமானது, 28 வயசு ஆகிவிட்டது. ஆனால், காதலின் முன் ஒரு குழந்தையைப் போல பயணிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X