மைனர் பெண்ணை கடத்த முயன்ற நடிகை சனா கான் தலைமறைவு!
மும்பை: சல்மான் கான் நடிக்கும் மென்டல் படத்தில் ஜோடியாக நடிக்கும் சனா கான் திடீர் மாயமாகியுள்ளதால் பாலிவுட் உலகில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.
கடத்தல் புகார் காரணமாக போலீசின் கைது நடவடிக்கைக்குப் பயந்து சனாகான் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளம்பரத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து சில்க் ஸ்மிதா வாக நடிப்பது வரை பல பரபரப்புகளை பற்ற வைத்திருக்கும் சனா கான் இப்போது கடத்தல் புகாரில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.

பேச்சிலேயே பரபரப்பு
தமிழில் சிலம்பாட்டம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் சனாகான். ‘ஆயிரம் விளக்கு‘, ‘பயணம்‘ போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். அவ்வப்போது பொது மேடைகளில் எதையாவது பேசி பரபரப்பை பற்றவைப்பார்.

பிக் பாஸ் லேடி
பாலிவுட்டில் ‘பாம்பே டு கோவா, ‘ஹல்லா போல் என ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அங்குள்ள நடிகைகளின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த சமயத்தில்தான் சல்மான் கான் நடத்திய ‘பிக் பாஸ் சீசன் 6 ரியாலிட்டி ஷோவில் சனா கான் பங்கேற்றார்.

வாக்கு கொடுத்த சல்மான்
இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதாக கூறப்படுகிறது. அப்போதே தன்னுடைய படத்தில் கதாநாயகியாக்குவதாக வாக்கு கொடுத்தாரம் சொன்னது போலவே தன்னுடைய ‘மென்டல்' படத்தில் சனாவை தனக்கு ஜோடியாக்கினார் சல்மான்.

சில்க் வேடத்தில் சனா கான்
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மலையாளத்தில் சனா கான் நடித்து வருகிறார்.

கடத்தல் புகார்
இந்த நிலையில் தன்னுடைய உறவினர் பையனுக்காக மைனர் பெண்ணை கடத்த முயன்றார் என்று சனா மீது புகார் எழுந்துள்ளது. இதில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சனா கான் தலைமறைவாகியுள்ளார். இதனால் மென்டல் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











