குப்புறப்படுத்து கொரட்ட விடும் பிக் பாஸ் பிரபலம்.. தூங்குறது தான் ரொம்ப பிடிக்குமாம் !

சென்னை : விஜய் டிவி பிக் பாஸ் மூலம் பலர் பிரபலமாகி இருந்தாலும் ,சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாருக்கும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிக் பாஸ் புகழை வைத்து படவாய்ப்புகள் தேடும் வேட்டையில் பலரும் இறங்கிவிட்டனர்.தனது சமூகவலைதளபக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் பார்வையையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலரும் பலவிதமாக போஸ் கொடுக்க, இந்த பிக் பாஸ் பிரபலமோ தனக்கு தூங்குவது தான் ரொம்ப பிடிக்கும் என்று குப்புறப்படுத்து தூங்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார் .

பிக் பாஸ் மாயம்

பிக் பாஸ் மாயம்

பிரபல தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ இருந்தாலும் ,விஜய் டிவியின் பிக் பாஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதற்கு காரணம் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனா இல்லை கண்டெஸ்டன்ட்டா என்று இது வரை யாருக்கும் புரியாத புதிராக இருக்கின்றது.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

என்னதான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பிரபலமானாலும்,படங்களில் நடிக்கும் வாய்ப்பு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாருக்கும் வரவில்லை .டைட்டில் வின்னராகவே இருந்தாலும் அவர்களின் நிலைமை திண்டாட்டமாகத்தான் இருக்கின்றது.இருந்தாலும் பல நடிகர் ,நடிகைகள் வாய்ப்பு கிடைத்தே ஆகவேண்டும் என்று தனது சமூகவலைதளபக்கத்தில் பல ரகமான போட்டோஷூட்களில் இறங்குகின்றனர் .

விசில் மட்டும்

விசில் மட்டும்

அந்த வகையில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் பிரபலமான ஷெரின், அதன் பின் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. பிறகு அவருக்கு கிடைத்த படம் தான் விசில், வருமான ரீதியாக படம் வெற்றி பெறவில்லை என்றாலும் பேய் கான்செப்ட்டுடன் வந்த படங்களில் இது நல்ல பெயரையே பெற்று தந்தது. அதற்கு பிறகு காணாமல் போன ஷெரின்,விக்ரமின் பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

பிக் பாஸ் கொடுத்தது

பிக் பாஸ் கொடுத்தது

அப்போதெல்லாம் கிடைக்காத அறிமுகம் பிக் பாஸ் இவருக்கு பெற்று தந்தது .ஷெரின் என்று சொன்னால் தெரியும் அளவிற்கு பிரபலமாக இருக்கிறார் .அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பல போட்டோஷூட்ஸ் நடத்தி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஷெரின் .கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக எந்த படத்திலிலும் நடிக்காத இவர்,பட வாய்ப்புக்காக காத்துகொண்டு இருக்கிறார் .

தூங்குறது தான் பிடிக்கும்

தூங்குறது தான் பிடிக்கும்

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக பரவுகின்றது.அவரது ரசிகர்களால் பகிரப்பட்டும் வருகின்றது.ரசிகர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் பல போட்டோக்களை வைத்து விட்டு உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு என்று கேள்வியையும் எழுப்பியுள்ளார் .பலரும் மற்ற புகைப்படத்தை சொல்ல ஷெரின், எனக்கு கடைசி புகைப்படம் தான் பிடிச்சிருக்கு என்று கூறியுள்ளார் .அதில் அவர் குப்புறப்படுத்து தூங்கிக்கொண்டு இருக்கிறார் .இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஸ்மைலி மற்றும் பல கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X