கோழி குஞ்சு ட்ரெஸ்ஸில் செம க்யூட்டாக நடிகை ஐஸ்வர்யா தத்தா!

சென்னை: தமிழில் ஓரிரு திரைப்படங்களிலேயே பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளார்

நடிகர் ஆரியுடன் இணைந்து அலேகா என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

சில கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது கோழி குஞ்சு ட்ரெஸ்ஸில் செம க்யூட்டாக இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

 அலட்டிக்கொள்ளாத நடிப்பை

அலட்டிக்கொள்ளாத நடிப்பை

சினிமா மற்றும் தொலைக்காட்சி என ஒரே சமயத்தில் படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். மிக அமைதியான கதாபாத்திரத்தில் அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யாவுக்கு அதன்பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இருப்பினும் இருக்கின்ற சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அந்தவகையில் விஷாலின் பாயும்புலி மற்றும் விக்ரம் பிரபுவின் சத்ரியன் ஆகிய படங்களில் தங்கை வேடங்களில் நடித்திருந்தார்

 பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாக இருக்க மிகச்சிறப்பாக விளையாடி இறுதிவரையிலும் சென்ற ஐஸ்வர்யா தத்தாவுக்கு இப்பொழுது உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவரை சமூக வலைதளத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது

 முதல் முறையாக ஆரியுடன்

முதல் முறையாக ஆரியுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு இப்பொழுது அலேகா என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. நடிகர் ஆரியுடன் முதல் முறையாக இணைந்து ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

 நான்கு பெண்களை மையமாக கொண்டு

நான்கு பெண்களை மையமாக கொண்டு

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகில் பயங்கர கேம்,மிளிர் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் இன்று வரை ரிலீஸ் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஹிந்தி மற்றும் தெலுங்கை தொடர்ந்து தமிழில் லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படம் ஷ் என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழ் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாகி வரும் இந்த கதையில் நான்கு பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. நான்கு பெண்களில் ஒருவராக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.

Recommended Video

Aishwarya dutta dance video
 கோழி குஞ்சு ட்ரெஸ்ஸில் செம க்யூட்டாக

கோழி குஞ்சு ட்ரெஸ்ஸில் செம க்யூட்டாக

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து இப்போது கவர்ச்சிக்கு மாறியுள்ள ஐஸ்வர்யா. அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை கொதிக்கவிட்டு வருகிறார் . அந்த வகையில் இப்பொழுது கோழி குஞ்சு ட்ரெஸ்ஸில் செம க்யூட்டாக இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X