சாமி சிலையாட்டம் பிக்பாஸ் திவ்யா கணேஷ்.. ஆனால் அந்த கேப்ஷன் தான் குபீர் சிரிப்பை வரவெச்சுடுச்சு

சென்னை: பட்டு சேலை, அடுக்கடுக்கான தங்க நகைகள், கோவில் திருவிழாவில் பார்க்கும் அம்மன் சிலையைப் போல கம்பீரமான தோற்றம் என நடிகை திவ்யா கணேஷ் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், அந்த புகைப்படங்களை விட அவர் வைத்திருக்கும் கேப்ஷன்தான் ரசிகர்களை குலுங்கி சிரிக்க வைத்திருக்கிறது.

சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக இருக்கும் திவ்யா கணேஷ், தொடர்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது நேரடியான பேச்சு மற்றும் இயல்பான குணத்தால் மேலும் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ஆனால், சமீபத்தில் அவர் நடித்த 'Sshhh 3' வெப் சீரிஸ் தான் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது. அந்த தொடரில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கவர்ச்சியான தோற்றத்திலும், நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த காட்சிகளின் புகைப்படங்களும், வீடியோ கிளிப்புகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. "குடும்பப் பாங்கான இமேஜில் இருந்த திவ்யா கணேஷா இது?" என்ற கேள்வியுடன் சிலர் விமர்சித்தாலும், நடிகையாக கதாபாத்திரத்துக்காக நடித்திருக்கிறார் என மற்றொரு தரப்பு அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தது.

Bigg Boss Fame Divya Ganesh s Traditional Look Goes Viral Her Caption Steals the Show

அதன்பிறகு அந்த வெப் சீரிஸின் புரமோஷனுக்காக நடைபெற்ற 'Wrong Answer Only' நிகழ்ச்சியிலும் திவ்யா கணேஷ் பேசிய பதில்கள் இணையத்தில் ட்ரெண்டானது. குறிப்பாக, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் படுக்கையறை காட்சிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் எந்த தயக்கமும் இல்லாமல் கலகலப்பாக பதில் அளித்தது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற பட்டுப்புடவையில், தலை முதல் இடுப்பு வரை தங்க நகைகளால் அலங்கரித்த டிரெடிஷ்னல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை திவ்யா கணேஷ் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு புகைப்படத்திலும் சாமி சிலையைப் போல கம்பீரமாகவும், அதே நேரத்தில் எளிமையான புன்னகையுடனும் அவர் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss Fame Divya Ganesh s Traditional Look Goes Viral Her Caption Steals the Show

செம்மையான கேப்ஷன்: ஆனால், இந்த புகைப்படங்களுக்கு அவர் வைத்திருக்கும் "This is an Ad shoot... Unless Destiny Has Other Plans." என்ற கேப்ஷன்தான் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது. "இது ஒரு விளம்பர படப்பிடிப்பு தான்... விதி வேறு ஏதாவது முடிவு செய்திருந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை" என்ற அர்த்தத்தில் அவர் பதிவிட்ட இந்த வரிகளை பார்த்த ரசிகர்கள், "ஹீரோயினாக வாய்ப்பு வந்தா ரெடி என்று மறைமுகமாக சொல்லிட்டீங்களா?", "இந்த கேப்ஷனே செம காமெடி", "இப்படிப்பட்ட லுக்கில் சினிமா வாய்ப்பு வந்தால் கண்டிப்பா கலக்குவீங்க" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: மேலும் சில ரசிகர்கள், "இந்த அளவுக்கு நகை போட்டும் ஓவராக தெரியல", "எந்த ஜுவல்லரி இது?", "சேலை செம... நகை அதைவிட செம", "அம்மன் சிலை மாதிரி இருக்கீங்க" என்று அவரது டிரெடிஷ்னல் லுக்கை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தால் பேசுபொருளான திவ்யா கணேஷ், இப்போது அதற்கு நேர் எதிரான டிரெடிஷ்னல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் மீண்டும் அவரை ட்ரெண்டாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X