க்யூட் டாலாக மாறிய லாஸ்லியா.. இணையதளத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் !

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து இப்போது ஹீரோயினியாக பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் லாஸ்லியா.

மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படம் தமிழில் கூகுள் குட் டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக முன்னேறி வரும் லாஸ்லியா இப்பொழுது க்யூட் டாலாக மாறியுள்ள அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக

தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இப்பொழுது தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை லாஸ்லியா இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த லாஸ்லியா தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடியதன் காரணமாக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

முதல் படமே தோல்வி

முதல் படமே தோல்வி

சிறந்த போட்டியாளர் எனவே இறுதி வரை சென்று வெற்றி பெறுவார் என பெரிதும் நினைத்துக் கொண்டிருக்கையில் கவினுடன் காதல் வலையில் சிக்கி விளையாட்டில் கோட்டை விட்டார் .பின் இறுதிச்சுற்று வரை சென்று வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இவருக்கு என தனது தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது . இப்போது படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி வருகிறார். அறிமுக இயக்குனர் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் வெளியான பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லாஸ்லியாவுக்கு முதல் திரைப்படமே தோல்வி படமாக அமைந்தது.

கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

இந்த நிலையில் அடுத்ததாக தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார் மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர் மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் முதியவராக நடித்து வருகிறார்.

க்யூட் டாலாக மாறிய

க்யூட் டாலாக மாறிய

கூகுள் குட்டப்பாவை தொடர்ந்து ராட்சசன் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக கலக்கிக்கொண்டு உள்ள லாஸ்லியா நீல வண்ணப் ப்ராக்கில் இப்பொழுது க்யூட் டாலாக மாறிய அழகிய புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X