Poornima Ravi: ஜிம் வீடியோவை இறக்கிய பிக்பாஸ் பூர்ணிமா ரவி.. அடேங்கப்பா.. மொரட்டு ஒர்க்-அவுட்டா இருக்கே!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இல் போட்டியாளராக கலந்து கொண்டு, அட்டகாசமான பிளேயர் என்று பெயரெடுத்தவர் பூர்ணிமா ரவி. அதன் பின்னர் சினிமாக்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். அதேபோல் பெரிய படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இப்படி இருக்கையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜிம் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிக் பாஸ் சீசன் தமிழில் களமிறங்கிய பூர்ணிமா அதற்கு முன்னர் தனது சமூக வலைதள பக்கங்களால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இப்படி இருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவரும் மாயாவும் இணைந்து அந்த சீசனையே ஒரு கலக்கு கலக்கினார்கள். மேலும் அந்த சீசனில் பிரதீப் ஆண்டனி இருக்கும் வரை அவர்களால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதில் பூர்ணிமா ரவி மற்றும் மாயா என இருவரும் வீட்டில் இருந்த மற்றவர்களும் இணைந்து தான் தவறான குற்றச்சாட்டுகளை சொல்லி, பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்க காரணம் என்ற விமர்சனம் இப்போதும் உள்ளது. அதனால் தான் பூர்ணிமா ரவி பிக்பாஸ் போட்டியாளர்களை பேட்டி எடுக்கும் ஜோ மைக்கேலுக்கு பேட்டியே கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படியான விமர்சனங்கள் இருந்தாலும், பூர்ணிமா ரவி தனது சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்க கூடியவர். அதிலும் அவர் தனது அழகான புகைப்படங்களையும் அவ்வப்போது சில எக்ஸ்குளூசிவ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
ஜிம் வீடியோ: இப்படி இருக்கையில் பூர்ணிமா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜிம் ஒர்க்-அவுட் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதுவும் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுக்கு பயன்படுத்தப்பட்ட பின்னணி இசையை வைத்து அந்த வீடியோவை பக்காவாக எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்: இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும், யாரு நம்ம பூர்ணிமா ரவியா இது. அழகா இருக்காங்களே, அடடே ஜிம்மில் இப்படி ஒர்க்-அவுட் பண்ணுறாங்களா? என்றும் பலரும் ஹார்ட்டின்களையும் ஃபயர் எமோஜிகளையும் மாறி மாறி பதிவிட்டு வருகிறார்கள். மேலும் 45 ஆயிரம் பேருக்கு அதிகமான ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











