Don't Miss!
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Lifestyle
வாழைப்பூ கட்லெட்
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிக்பாஸ் பிரபலம் வாங்கிய சொகுசு கார்...ட்விட்டரில் டிரெண்டிங்காகும் தகவல்
சென்னை : பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தான் வாங்கிய பிஎம்டபிள்யூ காரை போட்டோவுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த தகவலை உடனடியாக ட்விட்டரில் வேகமாக பகிர்ந்து டிரெண்டிங் ஆக்கி உள்ளனர் அவரின் ரசிகர்கள்.
ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இந்த படங்களில் நடித்து பிரபலமானதை விட, மொட்டை மாடியில் புடவையில் ஒரே ஒரு கிளாமர் போட்டோஷுட் நடத்தி செம பாப்புலர் ஆகி விட்டார். அதற்கு பிறகு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ரம்யா பாண்டியன், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார்.
காத்து வாக்குல ஒரு காதல்... முதல் முறையாக சொல்வதை போல் காதல் செய்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா

ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன்
குக் வித் கோமாளியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. சோஷியல் மீடியாக்களிலும் அடிக்கடி கிளாமர் போட்டோஷுட் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

படங்களில் குவியும் பாராட்டு
சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் நடித்து பெரும் பாராட்டை பெற்றார். துளியும் மேக்அப் இல்லாமல், கிராமத்து கெட்அப்பில் இவர் நடித்த யதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஓடிடி-யில் வெளியானாலும் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மேலும் சில படங்களிலும் நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

டிரெண்டிங் ஆன ரம்யா பாண்டியன்
இந்நிலையில் இன்று திடீரென ட்விட்டர் டிரெண்டிங்கில் திடீரென #RamyaPandian என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது. இதை பார்த்த பலரும் ஷாக் ஆகினர். எதற்காக திடீரென சம்பந்தமே இல்லாமல் ரம்யா பாண்டியனை டிரெண்டிங் ஆக்குகிறார்கள் என ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் குழம்பிப் போயினர்.

இதுக்கு தான் டிரெண்டிங்கா
விசாரித்ததில் ரம்யா பாண்டியன் புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி உள்ளாராம். காருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, தான் புதிய கார் வாங்கிய தகவலையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதற்கு வாழ்த்து சொல்லி, கொண்டாடும் விதமாக ரம்யா பாண்டியன் ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.