ஜிம்மிலேயே குடியேறிட்டாங்களா? டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கு டாப் கியர் போட்ட ரவீனா தாஹா.. போட்டோஸை பாருங்க

சென்னை: சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பிக்பாஸ் என அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ரவீனா தாஹா. நடிப்பை விட சோஷியல் மீடியாவிலேயே அடிக்கடி ட்ரெண்டாகும் பிரபலங்களில் இவரும் ஒருவர்.

அவ்வப்போது போட்டோஷூட், டான்ஸ் ரீல்ஸ், கிளாமர் புகைப்படங்கள் என ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்து வரும் ரவீனா, இந்த முறை ஜிம்மில் இருந்து வெளியிட்டிருக்கும் ஒர்க் அவுட் புகைப்படங்கள்தான் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கின்றன.

புல்-அப், டெட்லிஃப்ட், டம்பெல் ஒர்க் அவுட் என சும்மா பெயருக்கு ஜிம் போவது இல்லை என்பதை நிரூபிக்கும் அளவுக்கு தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக முதுகு, தோள்பட்டை, கை தசைகளுக்காக அவர் செய்து வரும் பயிற்சிகளை பார்த்த ரசிகர்கள், "இது சும்மா ஃபிட்டனஸ் இல்லை... செம டிரான்ஸ்ஃபர்மேஷன் நடக்குது போல" என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Bigg Boss Fame Raveena Daha s Intense Gym Transformation Photos Go Viral on Social Media

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியல்களை விட சோஷியல் மீடியாவில்தான் அதிக கவனம் செலுத்தி வரும் ரவீனா, அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சில பதிவுகள் பாராட்டுகளை பெற்றாலும், சில சமயங்களில் அவரது கிளாமர் போட்டோக்களை வைத்து விமர்சனங்களும் எழுந்தது. அதற்கெல்லாம் பெரிதாக பதில் சொல்லாமல், தன்னுடைய வேலையை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறார்.

ஜும் போட்டோஸ்: இப்போது வெளியிட்டிருக்கும் ஜிம் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "ஏதாவது புதிய சீரியல் அல்லது வெப் சீரிஸுக்காக உடலை ரெடி பண்ணுறாங்களா?", "பிக்பாஸ் சீசனுக்குப் பிறகு இன்னொரு இன்னிங்ஸ்க்கு ரெடியாகிட்டாங்களே!" என்று தங்களது யூகங்களை பதிவிட்டு வருகின்றனர்.

கமெண்ட்ஸ்: எது எப்படி இருந்தாலும், ரவீனா தாஹா வெளியிட்ட இந்த ஒர்க் அவுட் போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், அவருடைய டெடிகேஷனை பலரும் பாராட்டி வருகின்றனர். "கஷ்டப்பட்டு ஒர்க் அவுட் பண்ணுறது வீணாகலை... ரிசல்ட் போட்டோவிலேயே தெரிகிறது" என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X