பிக் பாஸ் புகழ் ரித்விகாவுக்கு திருமணம்: அப்போ நடிப்பு?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் ரித்விகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பாலாவின் பரதேசி படம் மூலம் நடிகையானவர் ரித்விகா. நினைத்தது யாரோ, மெட்ராஸ், அழகு குட்டிச் செல்லம், ஒரு நாள் கூத்து, கபாலி, டார்ச்லைட், சிகை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.

காதல்
ரித்விகா ஒருவரை காதலிப்பதாகவும், இந்த ஆண்டே திருமணம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேச்சு கிளம்பியது. இது குறித்து பட விழா ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் ரித்விகா. இந்த ஆண்டு திருமணம் இல்லை என்கிறார் அவர்.

விளக்கம்
நான் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்கிறேன். அதற்குள் கையில் உள்ள படங்களில் நடித்து முடித்துவிடுவேன். புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லை. திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதை என் கணவர் முடிவு செய்வார் என்று ரித்விகா தெரிவித்துள்ளார்.

நடிப்பு
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பீர்களா என்று யாராவது கேள்வி கேட்டால் இதே கேள்வியை ஹீரோவை பார்த்து கேட்பீர்களா என்று நடிகைகள் கூறும் இந்த காலத்தில் ரித்விகாவின் பேச்சு வியப்பளிக்கிறது.

அதிருப்தி
ரித்விகாவுக்கு திருமணம் என்பதை அறிந்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் திருமதி ஆன பிறகும் படங்களில் நடிப்பதை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











