விஜய் - த்ரிஷா பாட்டு.. மழையில் குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.. டிரான்ஸ்பரன்ட் அழகு தெறிக்குது!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இன்னமும் பிக் பாஸ் ரசிகர்களின் ஃபேவரைட் குயினாக சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணன் உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வேறலெவலில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் தனது அம்மாவுடன் இணைந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று வந்த ஷிவானி நாராயணன் டூ பீஸ் உடையில் முதன்முறையாக அவுட் ஆஃப் ஃபோகஸில் புகைப்படங்களை வெளியிடும் அளவுக்கு துணிந்து விட்டார்.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3வது மனைவியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நிலையில், தொடர்ந்து 5 படங்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் அதன் பின்னர் ஒரு வருட காலமாக புதிதாக எந்தவொரு படத்திலும் கமிட் ஆகாத நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமே கதியென திரிந்துக் கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் பாட்டுக்கு மழையில் ஆட்டம்: தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான ஷிவானி நாராயணன் ஆதி படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து மழையில் ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிட்டுக் கொண்டு ஆட்டம் போட்ட "என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே" பாடலுக்கு தற்போது சென்னையில் பெய்த மழையில் நடிகை ஷிவானி நாராயணன் தனது அபார்ட்மெண்டில் நடனம் ஆடி வீடியோ ஒன்றை சற்று முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டிரான்ஸ்பரன்ட் பியூட்டி: சமீப காலமாக செம டிரான்ஸ்பரன்ட் உடைகளை அணிந்துக் கொண்டு கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து ஏகப்பட்ட இளைஞர்களை தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாற்றி வரும் வேலையை தீவிரமாக பார்த்து வருகிறார் பிக் பாஸ் ஷிவானி.

போல்டாக மாறிட்டாரு: தாய்லாந்தில் சமீபத்தில் சுற்றுலா சென்ற போது நீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் அளவுக்கு செம போல்டாக ஷிவானி மாறியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாத்தூரை சேர்ந்த ஷிவானி பொண்ணா இப்படி டூ பீஸ் உடையில் தில்லாக போஸ் கொடுக்கிறது என படு மோசமான கமெண்ட்டுகளையும் போட்டுத் தாக்கினர். ஆனால், இன்னமும் தெளிவாக டூ பீஸ் போட்டோக்களை ஷிவானி வெளியிட அவருடைய கூச்சம் தடுக்கிறதா? போன்ற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
நல்ல சான்ஸ் கிடைக்கணும்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் லாஸ்லியாவை தொடர்ந்து ரொம்பவே அழகாக இருக்கும் பெண் என்றால் அது நிச்சயம் ஷிவானி தான் என்றும் அவருக்கு நல்ல படங்களில் வாய்ப்புகள் அமைந்தால் நிச்சயம் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











