அன்னபூரணி சர்ச்சை.. மன்னிப்புக் கேட்ட நயன்தாரா.. பிக் பாஸ் பிரபலம் போட்ட கமெண்ட்டை பார்த்தீங்களா?

சென்னை: அன்னப்பூரணி படத்தில் இடம்பெற்ற வசனம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து அப்படம் நீக்கப்பட்டது. இது குறித்து நயன்தாரா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்வேகம் அளிக்கும் வகையில், பாசிட்டிவ் மெசேஜ் உடன் தான் படம் உருவாக்கப்பட்டது, யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல, இதை வேண்டுமென்றே செய்யவில்லை என நயன்தாரா அதில் தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியான அன்னபூரணி படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் குமார், பிக் பாஸ் பூர்ணிமா உள்ளிட்ட பலர் நடித்த அந்த படத்தில் சமையல் கலைஞராக நயன்தாரா நடித்திருந்தார்.

Bigg Boss fame Shivin commented on Nayantharas Apology post grabs fans attention

வருத்தம் தெரிவித்த நயன்தாரா: "ஜெய் ஸ்ரீராம்.. எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

அன்னபூரணி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி இருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்ட திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

Bigg Boss fame Shivin commented on Nayantharas Apology post grabs fans attention

எனது 20 ஆண்டு கால திரைப் பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அன்புடன் நயன்தாரா!" என வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலம் கமெண்ட்: நயன்தாராவின் போஸ்ட்டை பார்த்த பிக் பாஸ் ஷிவின் நிஜமாவா, என்னை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு மதமும் மக்களை நல்வழியை நோக்கியே நகர்த்தும் கருவியாக உள்ளது. சினிமா படங்கள் மூலமாக எந்தவொரு மதத்திற்கும் பாதிப்போ, லாபமோ இருக்க வாய்ப்பே இல்லை என கமெண்ட் போட்டுள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்: பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ஷிவின் போட்ட பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் சினிமா பொழுதுபோக்கிற்காக இருந்தால் இங்கே பிரச்சனை இல்லை. இந்து மதத்தை மட்டுமே டார்கெட் செய்து எடுக்கப்பட்டால் அது பிரச்சனை தான் என்றும் நயன்தாராவுக்கு கதை கேட்கும் போது அந்த காட்சியில் நடிக்கும் போதும் இதன் பின் விளைவுகள் பற்றி தெரியாதா? என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அந்த படங்கள் பிரச்சனை இல்லை: தியேட்டர் மற்றும் ஓடிடியில் தாராளமாக காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் வெளியாகலாம். அதெல்லாம் பாஜக அரசுக்கு பிரச்சனையே இல்லை என்றும் அன்னபூரணி தான் பிரச்சனை என நயன்தாரா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X