பிக் பாஸுக்கு பின் வாழ்க்கையே மாறிபோச்சு.. சௌந்தர்யா சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சௌந்தர்யா, தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அது குறித்து பகிர்ந்து கொண்ட நிலையில், அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சௌந்தர்யாவிற்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 8-வது சீசனில் கலந்து கொண்டு, ரன்னர்-அப் ஆக இரண்டாம் இடத்தை பிடித்தவர் சௌந்தர்யா. அவரது கியூட் ரியாக்ஷன்கள், விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்ட விதம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக, தனது குரல் காரணமாக வாழ்க்கையில் பல இடங்களில் அவமானங்களை சந்தித்ததாக அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் பகிர்ந்தது பலரையும் உருக்கி விட்டது.

Bigg Boss Soundarya Vishnu
Photo Credit:

சௌந்தர்யா: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சௌந்தர்யாவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதுடன், மீடியாவிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், பிக் பாஸ் சீசன் 7-ல் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது சௌந்தர்யா அவரை புரப்போஸ் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன்பிறகு இருவரும் இணைந்து அளித்த பேட்டிகளில் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

நல்ல செய்தி: திருமண அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சௌந்தர்யா மற்றும் விஷ்ணு இருவரும் சேர்ந்து சென்னை பெசன்ட் நகரில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றை தொடங்கி தொழில்முனைவோர்களாகவும் மாறினர். சௌந்தர்யாவின் குடும்பம் ஏற்கனவே பேக்கரி பிசினஸில் இருப்பதால், வணிகத் துறையில் அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புது வீடு: இந்நிலையில், தற்போது சௌந்தர்யா தனது வாழ்க்கையின் மற்றொரு முக்கியமான சாதனையாக சொந்த வீடு வாங்கியுள்ள தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். புதிய வீட்டில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரசிகர்கள், "கனவுகள் நிறைவேற வாழ்த்துகள்" என பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் "பிக் பாஸ் மூலம் கிடைத்த பணம் இப்போது வேலை செய்கிறது" என கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். எப்படியானாலும், பிக் பாஸ் பயணத்திற்கு பிறகு சௌந்தர்யாவின் வாழ்க்கை புதிய உயரங்களை நோக்கி நகர்ந்து வருவதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X