சினிமால அவமானம் அதிகம்.. ஆனால், பணம் சம்பாதிக்கலாம்.. விசித்ரா பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் "மடிப்பு அம்சா"வாக வலம் வந்தவர் தான் நடிகை விசித்ரா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவர்ச்சிப் புயலாகப் பல படங்களில் முத்திரை பதித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி கணவர், குழந்தை என செட்டில் ஆனார்.
நீண்ட இடைவெளிக்குப் பின், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளும் நுழைந்து சிறப்பாக விளையாடினார். அப்போது, சினிமா படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த சில கசப்பான, வலிகள் நிறைந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது.

விசித்ரா பேட்டி: தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் விசித்ரா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா என்பது மிக வேகமாக, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களம். அதில் புகழும், பணமும் கிடைக்கும். ஆனால், அங்கே உண்மையான அன்பும், கருணையும் கிடைக்குமா? என்று கேட்டால் கிடைக்காது.
அதுவும் புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும்போது, அங்கே அன்பை எதிர்பார்க்கவே முடியாது. ஆரம்பத்தில் அவமானங்களையும், கேலி கிண்டல்களையும், அலட்சியங்களையும் மட்டும்தான் அதிகம் பார்க்க வேண்டி இருக்கும். ஆனால், ஒரேயொரு ஹிட் படம் கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கென்று ஒரு 'மார்க்கெட்' வந்துவிட்டதால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழ்வார்கள் அது தான் சினிமா.

Bigg Boss Vijay TV Vichithra

மார்க்கெட் வந்தால் மாறும் உலகம்: சினிமாத்துறைடிய பொருத்தவரை இங்கு நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது. அதனால்தான் சினிமாவில் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும். நம்மிடம் மிகவும் பாசமாக பழகுகிறார்களே என்று நெருங்கிவிடக் கூடாது. அதேபோல, எதிரியாக்கி ஒதுக்கவும் கொள்ளவும் கூடாது. ஏனென்றால் காலம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறும். நான் எப்போதுமே சினிமா நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிப்பேன். யாரிடமும் அளவுக்கு அதிகமாக நெருங்கிப் பழக மாட்டேன். அந்த எல்லையை நான் சரியாக வைத்திருந்ததால் தான். இன்று என் வாழ்க்கையை நான் எந்தக் குழப்பமும் இல்லாமல், மிகுந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நடிகை விசித்ரா பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X