ஷங்கர் படத்துலயே நடிச்சாச்சு.. பாலியில் செம ஜாலி பண்ணும் பிங்க் பியூட்டி யாஷிகா ஆனந்த்.. வேறலெவல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்துக் கொண்டு தனது கவர்ச்சியால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். கார் விபத்தில் தனது தோழியை இழந்த பின்னர் தனக்கும் காலில் அடிப்பட்டு பல தையல்களை போட்டுக் கொண்டு சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து வந்தார். அதனால், திடீரென அவருக்கு கிடைத்த பல பட வாய்ப்புகள் அப்படியே குறைந்து போனது.
ஆனால், உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்த யாஷிகா ஆனந்துக்கு சில பாடல்களில் நடிக்கவும், ஒரு சில கவர்ச்சி காட்சிகளில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

பழையபடி மீண்டும் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வந்த அவருக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திலே நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது விடுமுறையை பாலி தீவில் செம ஜாலியாக கொண்டாடி வரும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்: ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டிரெய்னராக நடித்திருப்பார் யாஷிகா ஆனந்த். கயாடு லோஹருக்கு நிகழ்ச்சியில் உதட்டில் முத்தம் கொடுக்க பாய்ந்த சிறுவன் போல இளம் வயது ஜீவா நீச்சல் டீச்சருக்கு லிப் கிஸ் கொடுப்பது போன்ற படுமோசமான காட்சியில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக் குத்து என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் இவர் பேசும் "ஓட்டை மூடிக்கிச்சு" போன்ற டபுள் மீனிங் வசனங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின.

பிக் பாஸ் லீலைகள்: அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்துக் கொண்டு கவர்ச்சி தூக்கலாக நீச்சல் குளத்தில் இவர் போட்ட ஆட்டத்தை எல்லாம் பார்த்துவிட்டு கமல் சார் நிரந்தரமாக நீச்சல் குளத்தை படையப்பா படத்தில் வரும் கிணறு போல பூட்டி சீல் வைத்து விட்டார். விஜய் சேதுபதி வந்தும் அதனை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது நண்பர் பாலாஜி முருகதாஸ், முன்னாள் காதலரான நிரூப் என அடுத்தடுத்த சீசன் போட்டியாளர்களையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்ததே இவர்தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

ஷங்கர் படத்தில் அப்படியொரு சீன்: ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் வெளியான ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் சைடாகவே நடந்து வரும் தவாலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுனில் உடன் ஆரம்பத்தில் வரும் ரொம்பவே வல்கரான காட்சியில் யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். அவரது முன்னழகை பார்த்துக் கொண்டே வருகிறார் என அவர் அறையும் காட்சிகளில் காவாலா படத்தில் தமன்னாவுடன் டான்ஸ் போட்ட சுனில் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

பாலியில் ஜாலி: தி லெஜண்ட், கேம் சேஞ்சர் என தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் தற்போது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் தனது விடுமுறையை செம ஜாலியாக கொண்டாடி வருகிறார். அங்கே பிங்க் நிற டாப்ஸ் அணிந்துக் கொண்டு செம எக்ஸ்போஸிங்காக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருக்கும் 4.1 மில்லியன் ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்தே எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











