ப்ளீஸ்..உங்களுக்கு அழகே அதுதான்..ரம்யா பாண்டியனிடம் கெஞ்சும் ரசிகர்கள்!

சென்னை : இன்ஸ்டா குயின் ரம்யா பாண்டியன் தன்னை வளர்த்து விட்ட ரசிகர்களை மறக்காமல் அழகிய புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன் பின் ஜோக்கர் திரைப்படத்தில் குருசோம சுந்தரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தேசியவிருதை வென்றது. இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் ரம்யா பாண்டியன்.

பின்னர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்திருந்தார்.

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்த போதும் பட வாய்ப்பு கிடைக்காததால், ஜாலியாக ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் செய்திருந்தார். இந்த போட்டோஷூட் தான் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது மட்டும் இல்லாமல் இடையழகி ரம்யா பாண்டியன் என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய ரம்யா, அடுத்ததாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் பைனல் வரை சென்ற அவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டில் நுழைந்தார்.

மலையாளப்படத்தில்

மலையாளப்படத்தில்

நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ரம்யா பாண்டியன் கால் பதிக்கிறார். லிஜோ ஜோஸ் இயக்கும் இந்த படத்தில் மம்முட்டி கதாநாயகனாக இணைகிறார். தமிழ் ரசிகர் பட்டாளம் ஏராளம் கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது முதல் முறையாக வேற்று மொழி படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இடும்பன்காரி படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

உள்ளாடையுடன் போஸ்

உள்ளாடையுடன் போஸ்

படங்களில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ரம்யா பாண்டியன் போட்டோஷூட் என வந்துவிட்டால் கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். சமீபத்தில் இவர் வெள்ளை நிற உள்ளாடை அணிந்து கொண்டு தாறுமாறாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல் சென்றது.

உங்களுக்கு அழகே அதுதான்

உங்களுக்கு அழகே அதுதான்

தற்போது ரம்யா பாண்டியன் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு, இடை தெரியாமல் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு அழகே அந்த இடைதான், அந்த இடையை காட்டாமல் எதுக்கு இந்த போட்டோஷூட் என்றும், இடுப்பை காட்டுங்க ரம்யா மேடம் என்று, ரம்யா பாண்டியனிடம் கெஞ்சி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X