For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வனிதாவுக்கு குவியும் படவாய்ப்புகள்… வசந்தபாலன் படத்திலும் ஒப்பந்தமானார் !

  |

  சென்னை : நடிகை வனிதா விஜயகுமார், வசந்த பாலன் இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

  Vanitha Vijayakumar pressmeet | Filmibeat tamil

  அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயனும் நடிக்கின்றனர்.

  சாதியை குறிப்பிட்டு ஓவர் பேச்சு.. 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகும் மீரா மிதுன்! சாதியை குறிப்பிட்டு ஓவர் பேச்சு.. 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகும் மீரா மிதுன்!

  இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  8 மாத குழந்தையை இதய நோயிலிருந்து மீட்க உதவுங்களேன் ப்ளீஸ்

  விஜயகுமாரின் மூத்த மகள்

  விஜயகுமாரின் மூத்த மகள்

  பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா,மாணிக்கம், ஹிட்லர் பிரதர் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

  புகழ் பெற்றார்

  புகழ் பெற்றார்

  தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சர்ச்சைகளில் சிக்கிய வனிதா தனியாக 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3யில் 17 போட்டியாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார். பின்னர் மக்கள் அளித்த வாக்களிப்பால் 84 நாட்களிலேயே அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

  யூடியூப் சேனல்

  யூடியூப் சேனல்

  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா, குக் வித் கோமாளி, பிக் பாஸ் 3 கொண்டாட்டம், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். மேலும் இவர், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

  பிக் பாஸ் ஜோடிகள்

  பிக் பாஸ் ஜோடிகள்

  விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களைக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் திடீரென விலகுவதாக அறிவித்தார். மேலும்,அவர் வெறியேறியதற்கு நிகழ்ச்சியின் நடுவராக உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

  ஏராளமான படங்கள்

  ஏராளமான படங்கள்

  வைரல் ஸ்டாராகி உள்ள வனிதா அனல்காற்று, 2 கே அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், பிக்கப் ட்ராப் என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இதில் பிக்கப் ட்ராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பினர்.

  4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன்

  4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன்

  இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் என்று கூறினார். மேலும், நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால் தான் தற்கொலைகள் அதிகரிப்பதாக வனிதா கூறினார்.

  வசந்த பாலன் இயக்கத்தில்

  வசந்த பாலன் இயக்கத்தில்

  வனிதா தற்போது வசந்தபாலன் இயக்கி வரும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயனும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வசந்த பாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

  முன்னணி இயக்குனர்

  முன்னணி இயக்குனர்

  இயக்குனர் வசந்த பாலன், ஆல்பம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக வெயில் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 2006ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இதையடுத்து, அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற வெற்றித்திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார்.

  English summary
  Director Vasanthabalan who has directed movies like Veyil, Aravaan, Angadi Theru, Kaaviya Thalaivan. vanitha vijayakumar joins the cast of vasantha balans movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X