கொரோனாவை நினைச்சா வெளிய வரவே பயமா இருக்கு… நடிகை ஜனனி !
சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஜனனி.
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் பிடித்த நடிகையானார்.
தற்போது பட வேலைகளைக் தொடங்கி உள்ளது மகிழ்ச்சியை அளித்தாலும், கொரோனாவை நினைச்சா பயமா இருக்கு என்று கூறியுள்ளார்.

நல்ல பெயர்
பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் திரைப்படத்தில் பெண் காவலாளியாக வந்து இருப்பார் ஜனனி. அந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதையடுத்து, பாகன், தெகிடி, அதே கண்கள் முப்பரிமாணம் பல திரைப்படங்களில் நடித்தார்.

105 நாட்கள் இருந்தார்
பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் அனைவரிடத்திலும் அன்பாக பழகினார். இதனால் இறுதிவரை வெளியேறாமல் பிக்பாஸ் இல்லத்தில் 105 நாட்கள் வரை இருந்து நான்காவது இடத்தை பிடித்தார்.

மாற்றம் ஒன்றே மாறாதது
சமீபத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது எனக்கூறி ஜனரி ஐயர் என்ற பெரியலிருந்து ஜாதியை நீக்கினார். மேலும், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றும் கூறியிருந்தார். ஜாதி துறப்பை வரவேற்று ஜனனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பயமா இருக்கிறது
இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்துள்ளதால் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டப்பிங் பணியை தொடங்கி உள்ள ஜனனி, கொரோனா பல உயிர்களை காவு வாங்கிடுச்சி, எல்லாத்தையும் மாத்திடுச்சி , பட வேலைகள் தொடங்கி உள்ளது மகிழ்ச்சி அளித்தாலும் கொரோனாவை நினைச்சா பயமாத்தான் இருக்கு என்று கூறியுள்ளார்.

தைரியமாக இருக்கிறேன்
மேலும், கொரோனாவை நினைச்சி பயந்துகிட்டு வீட்டிலேயே இருக்க முடியாது , வெளியில வந்துதான ஆகனும், கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கொஞ்சம் தைரியமாக இருக்கிறது என்று கூறினார். இருந்தாலும் கவனமா இருக்க வேண்டியது நமது கடமை என்றார். கசட தபற , யாக்கை திரி, பஹிரா, முன்னறிவான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











