கவினை காதலித்து தவறு செய்துவிட்டேன்… மனம் திறந்த லாஸ்லியா !

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா முதன்முதலாக கவினுடனான காதல் குறித்து மனம் திறந்து பேசினார்.

தமிழ்நாட்டில் ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இலங்கையிலிருந்து வந்தேன். ஆனால், இங்கு முதலில் எனக்கு சீரியலில், கதாநாயகிக்குத் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

இதைடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, அந்த நிகழ்ச்சியில், கவினை காதலித்தது மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்று லாஸ்லியா கூறினார்.

செய்திவாசிப்பாளர்

செய்திவாசிப்பாளர்

இலங்கையைச் சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அவர் பேசும் இலங்கை தமிழ் அழகுக்கு பல இளைஞர்கள் நான் நீ என்று போட்டிக் கொண்டு தங்களது இதயத்தை தொலைத்தார்கள்.

பிக் பாஸ் சீசன் 3

பிக் பாஸ் சீசன் 3

முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரீன் ஆகிய 4 பேர் மட்டும் இறுதிப்போட்டியாளர்களாக இருந்தார், லாஸ்லியாக சீசன்3யின் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகேன் ராவ் வெற்றிப் பெற்றார். இரண்டாம் இடத்தை சாண்டி பெற்றார். மூன்றாவது இடத்தை லாஸ்லியா பெற்றார்.

லாஸ்லியாவின் தந்தை மரணம்

லாஸ்லியாவின் தந்தை மரணம்

இந்த நிகழ்ச்சியின் போது கவின் லாஸ்லியா காதலிப்பாக வதந்திகள் வேகமாக பரவின. இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் அப்பா அந்த நிகழ்ச்சிக்கு வந்து, என் பெயரை கெடுக்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தியா என்று லாஸ்லியாவை கடுமையாக திட்டினார். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த லாஸ்லியா அதன் பிறகு கவினை சந்திக்கவே இல்லை. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தார்.

பிரண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக

பிரண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக

பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நகைச்சுவை நடிகர் சதீஷ் என பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கூகுள் குட்டப்பனில்

கூகுள் குட்டப்பனில்

பிரண்ட்ஷிப் படத்தை அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தர்ஷன்,யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பது பெற்று வருகிறது.

கவினை காதலித்து தவறு...

கவினை காதலித்து தவறு...

இந்தநிலையில் தற்போது லாஸ்லியா அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்தது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளார். என் குடும்பத்திற்காகவும் என்னுடைய தங்கைகளுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அவர்களுக்காக விளையாட வந்த எனக்கு, காதல் வந்தது தவறு என்றார். மேலும் கவினை காதலித்தது மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்று கூறினார். அதனால்தான் இந்த காதலை முறித்துக் கொண்டேன் என்ற லாஸ்லியா, தந்தையின் மரணத்திற்கு பிறகு என் தங்கைகளை பார்த்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு என்னிடம் இருக்கிறது என்றும் லாஸ்லியா அந்த பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X