என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவுக்கே டஃப் கொடுப்பாரு போல.. சட்டை பட்டனை கழட்டிய லாஸ்லியா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்திற்கு அடியெடுத்து வைத்த நடிகையும் செய்தி வாசிப்பாளருமான லாஸ்லியா மரியநேசன், தன்னுடைய அழகாலும். கொஞ்சும் தமிழ் பேச்சாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒரு சில படத்தில் நடித்த அவருக்கு வாய்ப்பு சரியாக அமையாததால், தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா மரியநேசன் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய காரணத்தினால் லாஸ்லியாவின் குரல் வளம் பலருக்கும் பிடித்திருந்தது. அதே போல பல இளைஞர்கள் அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய தமிழ் அழகும், இவரின் அழகும் ரசிகர்களின் மனதைத் கவர்ந்தது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, கவினை காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது.

லாஸ்லியா மரியநேசன்: பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருவருடைய பேச்சுவார்த்தை, செல்ல சண்டைகள் பெரிய அளவில் வைரலானது. ஒரு கட்டத்தில் கவின் பணப்பெட்டியுடன் வெளியேறிய போது, லாஸ்லியா கதறி அழுதார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால், லாஸ்லியா, கவின் இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி விட்டனர். அதன்பின் சினிமாவில் பிஸியாக இருந்த கவின், தனது நீண்ட நாள் தோழி, மோனிகாவை திருமணம் செய்துகொண்டார்.

Losliya Mariyanesan instagram
Photo Credit:

ஒரு சில படத்தில்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியா. மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் 'கூகுள் குட்டப்பா' என்கிற பெயரில் வெளியானது. இதில், பிக் பாஸில் தன்னுடன் சக போட்டியாளராக இருந்த தர்ஷனுடன் சேர்ந்து நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, பிரண்ஷிப் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதைத்தொடர்ந்து ஜென்டில்வுமன், மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங், போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸில் பப்ளி ஆக காணப்பட்ட லாஸ்லியா தற்போது கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து இருக்கிறார். ஆனால், தமிழக ரசிகர்களுக்கு அந்த பிக் பாஸ் லாஸ்லியாவைத்தான் பிடித்து இருக்கிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

கவர்ச்சி ரூட்: பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட நடிகை லாஸ்லியா, தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது, இவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு, கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் லைக்குகளை குவித்து வருகின்றனர். நடிகை லாஸ்லியாவை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்காகவே லாஸ்லியா தொடர்ந்து புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். அண்மையில் லாஸ்லியா, யூடியூபர் ஹரிபாஸ்கருடன் இணைந்து 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ரயான், இளவரசு, ஷாரா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்த காலத்து தலைமுறையினரை கவரும் வகையில் இருந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X