லிப் கூலிங் கிளாஸில் க்யூட் போட்டோவை பதிவிட்ட லாஸ்லியா!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இப்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் நடிகை லாஸ்லியா
பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான இவர் இப்பொழுது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்
அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் லாஸ்லியா இப்பொழுது லிப் டிசைனில் கூலான கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு செம க்யூட்டாக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுட்டித்தனமான பெண்ணாக
இலங்கையில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த நடிகை லாஸ்லியா தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். பிக் பாஸில் வந்த நாள் முதலே மிகவும் சுட்டித்தனமான பெண்ணாக இருந்த லாஸ்லியாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்தது. மேலும் விளையாட்டில் மிக சிறப்பாக விளையாடிய லாஸ்லியா காதல் சர்ச்சைகளில் சிக்கி சர்ச்சைகளுக்கு உள்ளானார்

கதாநாயகியாக அறிமுகமானார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி,முகின்ராவ், தர்ஷன் ஆகியோருடன் தனக்கென தனி குரூப்பை உருவாக்கிக் கொண்ட லாஸ்லியா மிகச் சிறப்பாக விளையாடி இறுதி சுற்று வரை சென்று பின் வெளியேற்றப்பட்டார் இருப்பினும் இவரின் தனித்துவமான கேரக்டருக்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இவரை பின்தொடர்ந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நட்பு மற்றும் திரில்லர் கலந்த படமாக வெளியான பிரண்ட்ஷிப் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது

கூகுள் குட்டப்பா
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக போட்டியாளராக இருந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இப்பொழுது புதிய திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். மலையாளத்தில் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாராகி வருகிறது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்து வரும் இந்த படத்தை சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர்
Recommended Video

லிப் கூலிங் கிளாஸ்
இறுதி கட்ட பணிகளும் முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன்-தங்கையாக இருந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இந்த படத்தில் மிக நெருக்கமாக காதலர்களாக நடித்திருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் செம ஸ்டைலிஷான லிப் கூலிங் கிளாஸ் உடன் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











