நீச்சல் உடையில் ஜிலு ஜிலு போஸ்.. இணையத்தை தெறிக்க விட்ட நமிதா மாரிமுத்து!
சென்னை: பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் பயணித்துக் கொண்டிருந்த திருநங்கை நமீதா மாரிமுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் ஒய்யாரமாக நீச்சல் அடிக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
நமிதா மாரிமுத்து, தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான 'மிஸ் இண்டர்நேஷனல் குயின் - 2022' போட்டியில் கலந்து கொண்டு 'மோஸ்ட் பாப்புலர் வோட்' என்ற விருதினை பெற்றார்.திருநங்கைகளுக்கான அழகி போட்டி பலவற்றில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளார். நமீதா மாடல் அழகியாக மட்டுமில்லாமல், ஒரு சில படத்தில் நடித்தும் உள்ளார். சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் இவர் நடித்தது மட்டுமில்லாமல் பாடலொன்றும் பாடியிருக்கிறார்.

நடிகை நமீதா மாரிமுத்து: அதன் மூலம் பிரபலமான நடிகை நமீதா மாரிமத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர், கடந்து வந்த பாதை குறித்து பேசினார். திருநங்கையாக மாறிய போது, வாழ்க்கையில் அனுபவித்த பிரச்சனைகள் கூறி போட்டியாளர்களை மட்டுமில்லாமல், பார்வையாளர்களையும் கண்ணீர் ஆழ்த்தினார். அதன் பின் ஓவர் நைட்டில் நமீதா மாரிமுத்து பிரபலமானார். மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்தகள் அதிகமாக இருந்ததால், அந்த சீசனின் டைட்டில் வின்னர் நமீதா மாரிமுத்து தான் என அனைவரும் நினைத்து வந்த நிலையில், நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் ஏன் வெளியேறினார் என்று எந்த காரணத்தையும் சொல்லாமல் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவராக வெளியேறினார் என்று பிக் பாஸ் வாய்ஸ் மட்டுமே வந்தது.
நீச்சல் வீடியோ: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வெளியேறிய நமீதா மாரிமுத்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இப்போது, விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வரும் இவர். தற்போது, நீச்சல் உடையில், தண்ணீரில் குதித்து நீச்சல் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலர் லைக்குகளை குவித்து வரும் நிலையில், பொண்ணுங்களே பொறமைப்படும் அழகு என கருத்தைபதி விட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











