உண்மையிலேயே இஞ்சி இடுப்பழகி தான்... பிக் பாஸ் பாவனி ரெட்டியால் உறைந்து போன ரசிகாஸ்!
சென்னை : நடிகை பாவனி ரெட்டி சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
சின்னத்திரையில் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

க்யூட்
பிக் பாஸ்சீசன் 5 நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாவனி ஷோவுக்குள் நுழைந்ததுமே, தனது க்யூட்டான அழகாலும், கொஞ்சும் பேசிய தமிழிலும் ஏகத்திற்கும் பிரபலமாகி விட்டார். பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரிய சர்ச்சை எழுந்த போதும் அதை தைரியமாக எதிர்கொண்டார்.

காதலில் விழுந்த அமீர்
இதையடுத்து, வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், வந்ததுமே பாவனியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார். பின்னால் சுற்றுக்கொண்டுஇருந்த அமீர் ஒரு காதில்,நச்சுனு முத்தம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனாலும், பாவனி, அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளலாம் இருந்தார்.

ஏராளமான ரசிகர்கள்
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜூ டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார் பாவனி.

துணிவு படத்தில்
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ஜோடியாக கலந்து கொண்டனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்டார். இவர்கள் இருவரும் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். துணிவு படத்தில் கூட அஜித் இவர்களைப் பார்த்து ஒரு வழியாக லவ் ஒகே பண்ணிட்ட போல என்று அமீரைப் பார்த்து சொல்லி இருப்பார் இந்த படத்திற்கு பிறகு, இருவரின் மார்க்கெட்டும் எங்கையோ போய்விட்டது.

சேலையில் அம்சமாக
இந்நிலையில்,இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,ஏராளமான பார்வையாளர்களை வைத்து இருக்கும் பாவனி ரெட்டி, அம்சமான சேலையில் தனது சிறுத்த இடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு மலை போல் லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











